மாணவர்களே அலர்ட்..பிப்., 18 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு..புதிய அறிவிப்பை வெளியிட்ட மருத்துவ கல்வி இயக்ககம்

Published : Feb 14, 2022, 03:11 PM IST
மாணவர்களே அலர்ட்..பிப்., 18 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு..புதிய அறிவிப்பை வெளியிட்ட மருத்துவ கல்வி இயக்ககம்

சுருக்கம்

முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கான அவகாசம் பிப்ரவரி 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 16ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு அறிவித்துள்ளார்.  

முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கான அவகாசம் பிப்ரவரி 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 16ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு அறிவித்துள்ளார். தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கியது. முன்னதாக நடைபெற்ற முதற்கட்ட கலந்தாய்வு மூலம் 5,076 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நிலையில்,அவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கியது. அதன்படி,மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா பரவல் தடுப்பு விதிகள் பின்பற்றப்பட்டு,மருத்துவ கல்வி பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

குறிப்பாக,ஆள்மாறாட்டத்தை தவிர்க்க மாணவர்களின் கைரேகைகளை கண்டிப்பாக பெற கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி,மார்ச் 31 ஆம் தேதிக்குள் கைரேகைகளை வழங்காத மாணவர்கள் வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம்,7.5 இட ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களிடம் கல்லூரிகளில் எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது எனவும்,மேலும்,இட ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கான அவகாசம் பிப்ரவரி 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எற்கனவே பிப்ரவரி 16 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துகல்விக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?