இப்படியும் நடக்குமா…? சாக்லேட் சாப்பிட்ட 2 பசுமாடுகள் திடீர் பலி…! வருவாய்த்துறை தீவிர விசாரணை

By manimegalai aFirst Published Sep 26, 2021, 8:05 PM IST
Highlights

சேலம் மாவட்டத்தில் சாக்லேட்டுகளை சாப்பிட்டதில் 2 பசுமாடுகள் இறந்து போக, 2 மாடுகள் உயிருக்கு போராடி வருகின்றன.

சேலம்: சேலம் மாவட்டத்தில் சாக்லேட்டுகளை சாப்பிட்டதில் 2 பசுமாடுகள் இறந்து போக, 2 மாடுகள் உயிருக்கு போராடி வருகின்றன.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ளது கோம்பூரான்காடு. இன்று காலை வழக்கம் போல் அக்கிராமத்தில் உள்ள மக்கள் தங்களது மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.

மேய்ந்து கொண்டிருந்த மாடுகளில் சில, புதுசாம்பள்ளி மயானம் அருகே மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டிருந்த சாக்லேட்டுகளை தின்றுள்ளது. சாக்லேட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் 2 மாடுகள் சுருண்டு விழுந்து இறந்துள்ளன.

2 மாடுகள் நிலைமை கவலைக்கிடமாக இருக்க, அவைகளுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாக்லேட்டுகளை தின்ற மாடுகள் பலியான தகவல் உடனடியாக பரவ வருவாய்துறையினர் விசாரணையில் இறங்கினர்.

முதல்கட்ட விசாரணையில் காலாவதியான சாக்லேட்டுகளை தின்றதால் மாடுகளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. சாக்லேட்டுகள் கொட்டப்பட்ட இடத்தின் அருகில் பள்ளி ஒன்று இருக்கிறது.

இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் பள்ளி இயங்கவில்லை. ஒருவேளை பள்ளி வேளை நாட்களில் சாக்லேட்டுகள் கொட்டப்பட்டு இருந்தால் மாணவர்கள் நிலைமை என்னவாகி இருக்கும் என்பது கேள்விக்குறியே. இந்த சம்பவம் குறித்து போலீசாரும் விசாரணையை துவக்கி இருக்கின்றனர்.

click me!