கொரோனா தடுப்பூசி போட்டவங்களுக்கு தான் டாஸ்மாக்கில் சரக்கு… அதிரடி ஆர்டர் போட்ட கலெக்டர்

By manimegalai a  |  First Published Oct 2, 2021, 9:12 PM IST

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் தான் மதுபானம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


விருதுநகர்:  கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் தான் மதுபானம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து பதிவாகி வருகிறது. ஆனாலும் ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. கொரோனா பரவலை தடுக்க வாரம்தோறும் ஞாயிற்று கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந் நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் டாஸ்மாக் கடையில் மதுபானம் தரப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானக்கடையில் மதுபானம் தரப்படும். தடுப்பூசி போடாதவர்களுக்கு மதுபானம் தரக்கூடாது.

அப்படி மீறி மதுபானம் தந்தால் கடை விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.

click me!