தண்ணி அடிக்கிற… கறி சாப்பிடறவங்களுக்கு…! தமிழக அரசின் ‘சூப்பர்’ அறிவிப்பு

By manimegalai a  |  First Published Oct 18, 2021, 8:41 PM IST

மதுபானம் அருந்துபவர்களுக்காகவும், அசைவம் சாப்பிடுபவர்களுக்காகவும் இந்த வாரம் சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி மெகா முகாம் மாற்றப்பட்டு உள்ளது.


சென்னை: மதுபானம் அருந்துபவர்களுக்காகவும், அசைவம் சாப்பிடுபவர்களுக்காகவும் இந்த வாரம் சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி மெகா முகாம் மாற்றப்பட்டு உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று கடந்த காலங்களை ஒப்பிடும் போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா 2வது அலை கட்டுப்படுத்தப்பட்டு விட்ட நிலையில் ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாரம்தோறும் தமிழக அரசு கொரோனா தடுப்பூசி மெகா முகாமை நடத்தி வருகிறது. இந்த வாரமும் அந்த முகாம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டு உள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மதுபானம் குடிப்பவர்களும், அசைவம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடாது என்ற தகவல் பரவலாகி வருகிறது. இது தவறான தகவல். ஆனாலும் ஞாயிறன்று நடக்கும் தடுப்பூசி முகாமில் அவர்கள் கலந்து கொள்ள மறுக்கின்றனர்.

எனவே அவர்களுக்காக இந்த முறை சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

click me!