கொரோனா கட்டுப்பாடு கிடையாது.. தளர்வுகளை அள்ளி கொடுத்த அரசு..ஆனால் இதுமட்டும் கட்டாயம்..

Published : Mar 02, 2022, 06:12 PM IST
கொரோனா கட்டுப்பாடு கிடையாது.. தளர்வுகளை அள்ளி கொடுத்த அரசு..ஆனால் இதுமட்டும் கட்டாயம்..

சுருக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுக்கு மேலும் தளர்வு அளித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  

தமிழகத்தில் பின்பற்றப்பட்ட  கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கி கொள்வதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சில கட்டுப்பாடுகளை  தமிழக அரசு விதித்திருந்த நிலையில், தற்போது தொற்று குறைந்துள்ளதால் கட்டுபாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று பரவலை கட்டுபாட்டிற்குள் வைத்திருக்க நாளை முதல் மார்ச் 31 வரை கொரோனா ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் படி நடைமுறையில் சமுதாய, அரசு மற்றும் கலாச்சார கூட்டங்களுக்கு விதித்த தடை நாளை முதல் நீக்கப்படுகிறது. மேலும் திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 500 பேர் வரை பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 250 பேர் வரை அனுமதிக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு வெகுமாக குறைந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான விதிக்கப்பட்டுள்ள இதர கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படுகின்றன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் இந்த இரண்டு கட்டுப்பாடுகள் தவிர்த்து அனைத்துவகையான கட்டுபாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் மக்களின் வாழ்வாதாரம் கருதி, அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து முக கவசம் அணியவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியினையும் செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!