கடலூர் மாவட்டத்தில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெண்ணாடம் அடுத்துள்ளது தாழநல்லூர் என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த தம்பதியர் மணிகண்டன் தனலட்சுமியின் ஒன்றரை வயது குழந்தை கிருபாஸ்ரீ. சில நாட்களுக்கு முன்பு தமது நிலத்தில் வேலைசெய்யும் பணியாளர்களுக்கு மதிய உணவு ரெடி பண்ணுமாறு மனைவியிடம் கூறி இருக்கிறார் மணிகண்டன்.
அவரும் சாப்பாடு, சாம்பார் ஆகியவற்றை செய்து வைத்திருக்கிறார். அப்போது அம்மா தனலட்சுமி பின்னால் சென்ற கிருபாஸ்ரீ கொதிக்கும் சாம்பாரில் விழுந்துவிட்டது. அலறி துடித்த பெற்றோர் கிருபாஸ்ரீயை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஐசியூவில அனுமதிக்கப்பட்ட குழந்தை பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மருக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும் தீவிர சிகிச்சை பலனின்றி குழந்தை கிருபா ஸ்ரீ உயிரிழந்துவிட்டார். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் கடலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.