தொடரும் சாலை விபத்து..! வாகன ஓட்டுநர்களுக்கு தங்கும் விடுதியில் அறை .! தலைமைச்செயலாளர் திடீர் கடிதம்

By Ajmal Khan  |  First Published Jun 23, 2023, 1:13 PM IST

வாகனங்களில் செல்வோர் அறைகளில் தங்கும் நிலையில் வாகன ஓட்டுநர்களுக்கு தூங்க இடம் இல்லாத காரணத்தால் சரியான தூக்கமின்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கும் நிலையில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.


தொடரும் சாலை விபத்துகள்

நாளுக்கு நாள் இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. சாலை விபத்துகளை கட்டுப்படுத்த 4 வழிச்சாலை, 8 வழிச்சாலை என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டாலும் விபத்துகள் தொடர்ந்து கொண்டே வருகிறது. மேலும் அதிகமான வெப்பத்தில் லாரி ஓட்டுநர்கள் வாகனங்களை ஓட்ட வேண்டியுள்ளதால், அவர்களது நன்மைக்காக லாரிகளில் ஏசி வசதி அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் தமிழகத்தில் சாலை விபத்தில் பெரும்பாலும் ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் போது சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

Tap to resize

Latest Videos

undefined

கோவையில் பெண் பேருந்து ஓட்டுநரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த எம்பி கனிமொழி

ஓட்டல்களில் ஓய்வு அறை

இதனையடுத்து இது தொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் மேலும் வாகனங்களில் செல்வோர் அறைகளில் தங்கும் நிலையில் வாகன ஓட்டுநர்கள் வராண்டாவிலும், வாகனத்திலும் தூங்குவதாக குறிப்பிட்டுள்ளார். 

தலைமைச்செயலாளர் கடிதம்

சரியான தூக்கமின்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கும் நிலையில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தங்கும் விடுதிகளில் குறைந்த கட்டணத்தில் வாகன ஓட்டுநர்களுக்கு அறை வழங்க அறிவுறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும்  ஓட்டுநர்கள் தங்கும் அறைக்கான குறைந்த கட்டணத்தை வாகன பார்க்கிங் கட்டணத்துடன் சேர்க்கலாம் என இறையன்பு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

திமுகவிற்கு செக் வைக்கும் மத்திய அரசு.! செந்தில் பாலாஜி நண்பர்கள் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை

click me!