தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு..? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..

By Raghupati R  |  First Published Feb 12, 2022, 9:01 AM IST

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.


தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

மேலும், இரவு நேர ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் பிப்ரவரி 15-ந் தேதியுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

இந்த சூழலில், தமிழகத்தில் கொரோனா பரவல் நாளொன்றுக்கு 3,200-க்கும் குறைவாக சென்றுள்ளது. எனவே தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை மேலும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மேலும் தளர்வு அளிக்கப்படுமா என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. 

இன்று சென்னை, தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு மருத்துவ அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது.நர்சரி பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

click me!