கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது.. மணல் கடத்தல் வழக்குகளில் கடும் நடவடிக்கை- உயர்நீதிமன்றம்..

Published : Mar 24, 2022, 03:42 PM IST
கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது.. மணல் கடத்தல் வழக்குகளில் கடும் நடவடிக்கை- உயர்நீதிமன்றம்..

சுருக்கம்

சுத்தமாக ஓடிய ஆறுகள் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மணல் கடத்தல் வழக்குகளில் கடுமையான நடவடிக்கைகளை வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.  

மணல் கடத்தல்:

சுத்தமாக ஓடிய ஆறுகள் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மணல் கடத்தல் வழக்குகளில் கடுமையான நடவடிக்கைகளை வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டத்தைச் சேர்ந்த  36 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தனர். அதில், சட்டவிரோதமாக மணல் உள்ளிட்ட கனிம பொருட்களை கடத்தியதாக தங்கள் வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த வாகனங்களை திரும்ப ஒப்படைக்க நாகை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் மறுத்த உத்தரவை ரத்து செய்து வாகனங்களையும் ஒப்படைக்க உத்தரவு பிறபிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

மேலும் அந்த மனுவில் சட்டவிரோதமாக மணல் உள்ளிட்ட கனிம பொருட்களை கடத்தியதாக பொய் வழக்கு போட்டு, டிப்பர் லாரிகள், பொக்லைகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் எங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் , திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வெயில், மழை உள்ளிட்டவற்றால் வாகனங்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளதும் இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை விடுவிக்க வேண்டுமெனவும், விசாரணைக்கு தேவைப்படும்போது அந்த வாகனங்களை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

வளர்ச்சி என்ற பெயரில் .. நீதிபதி கருத்து:

இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறபித்தார். வாகன உரிமையாளர் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் இழுத்தடிப்பு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

மேலும், வளர்ச்சி என்ற பெயரில் எந்த காரணத்தையும் முன்னிட்டும் கனிம வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது என்று கூறிய நீதிபதி, நமது தாய் நிலத்தை எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் முன்னோர்கள் நமக்கு வழங்கியது போல, நாமும் எதிர்கால சந்ததியினருக்கு கொடுக்க வேண்டும் என்றார். இந்த பூமி மீது ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பாதிப்பையும் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது என்று வேதனை தெரிவித்துள்ளார். சுத்தமாக ஓடிய ஆறுகள் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மணல் கடத்தல் வழக்குகளில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதையும் மேற்கோள் காட்டி இந்த வழக்கை முடித்து வைத்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?