அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என்று ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து நீதிபதி நிஷா பானு அறிவித்துள்ளார்.

04:51 PM (IST) Jul 25
தமிழக அரசு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
04:50 PM (IST) Jul 25
மனிதக் கழிவை மனிதர் சுமக்கும் இழிவுக்கு முடிவு கட்டும் இயந்திர மயத்திற்கான சட்ட திருத்தத்தை கைவிடுவதா என மத்திய அரசுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
03:25 PM (IST) Jul 25
தினமும் 2GB டேட்டா, 150 நாட்கள் நீண்ட வேலிடிட்டி மற்றும் இலவச அழைப்புடன் வரும் பிஎஸ்என்எல் சலுகையை பற்றி பார்க்கலாம்.
03:06 PM (IST) Jul 25
'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற போட்டியாளருக்கு, எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
02:34 PM (IST) Jul 25
பிரசார் பாரதி செய்தி சேவைத் துறையில், ஆகாஷ்வானியில் செய்தியாளர் பணிக்கான வேலை அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
02:22 PM (IST) Jul 25
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விதி எண் 267இன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ள நிலையில், 176இன் கீழ் விவாதம் நடத்த தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது
02:21 PM (IST) Jul 25
கர்நாடக அரசை கவிழ்க்க சிங்கப்பூரில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்
01:27 PM (IST) Jul 25
முகேஷ் அம்பானி பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ‘பாம் ப்ரூப்’ மெர்சிடிஸ் காரை வாங்கியுள்ளார். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.
12:20 PM (IST) Jul 25
ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது
12:20 PM (IST) Jul 25
ஹரியாணா மாநிலத்தில் இரட்டை பெண் குழந்தைகளை அவரது தாயே கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது
12:19 PM (IST) Jul 25
மழைக்காலக் கூட்டத்தொடர் - எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
12:11 PM (IST) Jul 25
10ம் வகுப்பு கல்வித்தகுதிக்கு மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பற்றி முழுமையாக காணலாம்.
11:41 AM (IST) Jul 25
ஐஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியதால் பயணிகள் டிக்கெட் முன் பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்துள்ளனர்.பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்ய Ask Disha என்ற விருப்பத்தை பயன்படுத்துமாறு ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது.
11:26 AM (IST) Jul 25
எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்துள்ள மாரிமுத்து வாழ்க்கையில், தான் கடந்து வந்த பாதை பற்றியும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
11:20 AM (IST) Jul 25
ஆவின் விற்கப்படும் பன்னீர் மற்றும் பாதாம் பவுடர் ஆகியவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது
11:12 AM (IST) Jul 25
இன்று நம்மில் பெரும்பாலானோருக்கு வாட்ஸ்அப் பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது. வாட்ஸ் அப் மெசேஜ்களை தெரியாமல் அழித்துவிட்டால் என்ன செய்வது? கவலையே வேண்டாம். வாட்ஸ் அப் மெசேஜ்களை பேக்கப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
10:33 AM (IST) Jul 25
“நீ கர்நாடகாவில் இருக்கிறாய், கன்னடம் கற்றுக்கொள்” என்ற செய்தியுடன் கூடிய ஆட்டோவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
10:15 AM (IST) Jul 25
மணிப்பூரில் பெண்கள் வீடியோ விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்
09:26 AM (IST) Jul 25
நீதிமன்றங்களில் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை அகற்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை, தற்போதைய நடைமுறையே தொடரும் என தலைமை நீதிபதி கூறிவிட்டார். புழல் சிறையில் முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தவிர வேறு எந்த சலுகைகளும் செந்தில் பாலாஜிக்கு சிறைத்துறை சார்பில் வழங்கப்படவில்லை.
08:53 AM (IST) Jul 25
2000 ரூபாய் பரிமாற்றத்திற்கான காலக்கெடு குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
08:18 AM (IST) Jul 25
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இணையவழியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
http://tnhealth.tn.gov.in, http://tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் வாயிலாக கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
08:15 AM (IST) Jul 25
கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி, இதேபோல் எரிபொருள் நிரப்புவதற்காக முதல்முறையாக சென்னை வந்தது. தற்போது மீண்டும் குஜராத்தில் இருந்து தாய்லாந்து செல்லும் வழியில் சென்னையில் எரிபொருள் நிரப்பிச் சென்றது.
08:13 AM (IST) Jul 25
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், எழும்பூர், அம்பத்தூர், ஆவடி, அடையார், போரூர் உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
08:12 AM (IST) Jul 25
நெல்லையில் காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அப்பகுதியில் எந்த அசாம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
08:12 AM (IST) Jul 25
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
08:12 AM (IST) Jul 25
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜியை எந்த தேதி முதல் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கலாம் என்பது குறித்து விசாரணை நடைபெற உள்ளது.
07:57 AM (IST) Jul 25
பெரிய தலைவர்கள் யாரும் அவரை சந்திக்க வரவில்லை என்று கும்பலால் தாக்கப்பட்ட மணிப்பூர் பாஜக எம்எல்ஏ வுங்ஜாகின் வால்டேவின் மனைவி குற்றஞ்சாட்டி உள்ளார்.
07:13 AM (IST) Jul 25
சென்னையில் 430வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
07:12 AM (IST) Jul 25
இலங்கை கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.