கலட்டிவிட்ட காதலி… கடுப்பான காதலன் செய்த காரியம்… நெல்லையில் பரபரப்பு!!

Published : Feb 27, 2022, 07:45 PM IST
கலட்டிவிட்ட காதலி… கடுப்பான காதலன் செய்த காரியம்… நெல்லையில் பரபரப்பு!!

சுருக்கம்

காதலிக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆத்திரத்தில் விஜய்ரூபன் என்பவர் காதலியுடம் எடுத்த புகைப்படத்தை போஸ்டரில் அச்சிட்டு ஊர் முழுவதும் ஒட்டி தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

காதலிக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆத்திரத்தில் விஜய்ரூபன் என்பவர் காதலியுடம் எடுத்த புகைப்படத்தை போஸ்டரில் அச்சிட்டு ஊர் முழுவதும் ஒட்டி தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை  சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் விஜய்ரூபன். இவர் களக்காடு பகுதியில் லவ் பேர்ட்ஸ் குருவிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் தனது தூரத்து உறவினரான மேலபத்தை பகுதியை சேர்ந்த கிருபா என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கிருபாவின் வீட்டிற்கு சென்று விஜய்ரூபன் கிருபாவை பெண் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் கிருபாவின் தந்தை  திருமணம் செய்து கொடுக்க முடியாது என மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் கிருபாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு எடுத்து உள்ளனர். இந்த நிலையில்  கடந்த 10 தினங்களுக்கு முன்பு  கிருபாவிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இதனை  அறிந்த விஜய் கிருபாவுடன் பழகும் நாட்களில் ஜோடியாக எடுத்த புகைப்படம் மற்றும் காதலி கிருபா எழுதி கொடுத்த காதல் கவிதை கடிதம் ஆகியவற்றை வால்போஸ்டரில் அச்சிட்டு நெல்லை மாவட்டம்  களக்காடு நகர் பகுதி முழுவதிலும் கவிதை வசனத்தோடு  சுவரொட்டியாக ஒட்டி உள்ளார். குறிப்பாக கிருபாவிற்கு நிச்சயம் செய்த மாப்பிளை வீட்டின் முன்பும் சுவரொட்டியை ஓட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிருபாவின் தந்தை தானியேல் இது குறித்து களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் களக்காடு போலீசார் விசாரணை செய்து வருவதோடு களக்காடு முழுவதும் சுவரொட்டி ஒட்டிய விஜயை தேடி வருகின்றனர். தனது காதலிக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆத்திரத்தில் காதலியுடம் எடுத்த புகைப்படம் மற்றும் அவள் எழுதி கொடுத்த கவிதையை போஸ்டரில் அச்சிட்டு களக்காடு முழுவதும் ஒட்டி தனது எதிர்ப்பை விஜய்ரூபன் என்பவர் வெளிப்படுத்திய சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!