BMW காரில் 5 அடி நீள நாகப்பாம்பு... அதிர்ச்சி வீடியோ...!

Nov 11, 2018, 10:17 AM IST

BMW உயர்தர சொகுசு காரில் 5 அடி நீள நாக பாம்பு ஒன்று பதுங்கியிருந்த நிலையில், கோவையில் உள்ள அந்த நிறுவனத்திற்கு கொண்டு சென்று பார்த்த போது பாம்பானது பிடிக்கப்பட்டது. இதை கண்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். 

திருப்பூரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் ஒருவர் திருப்பூரில் இருந்து முத்தூருக்கு தனது உறவினருடன் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதாக BMW 120 கிலோ மீட்டர் வேகத்தில் காரில் சென்றுள்ளார்.

காங்கயத்தை தாண்டும் பொழுது பாம்பின் மேல் கார் ஏறியுள்ளது. ஆனால் அவர் சிறிய குழி என்று நினைத்து வந்து விட்டார். பிறகு முத்தூர் அருகே வரட்டுக்கரை என்னும் ஊர் வரும் பொழுது பாம்பு காரின் முன்னால் படம் எடுத்துள்ளது அதை கண்ட இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். 

ஆனால் பாம்பு அவர்கள் கண்ணில் தென்படவில்லை. இந்நிலையில் கோவையில் உள்ள BMW நிறுவனத்திற்கு காரை கொண்டு சென்று பார்த்த போது 5 அடி நீள நாகபாம்பு சுருண்டு படுத்துள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து பாம்பு பிடிக்கும் நபரை அழைத்து வந்து  5 அடி நீள நாக பாம்பினை பிடித்து காட்டு பகுதிக்குள் விட்டனர்.