இந்த ஆண்டின் தமிழ்நாட்டின் அதிக வெப்பமான நாள் நேற்று தான் என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.
கோடை காலம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். ஏப்ரல் மாதத்திலேயே இப்படி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மே மாத அக்னி நட்சத்திரம் தொடங்கினால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றார் போல நாட்டின் பல மாநிலங்களில் ஏப்ரல் முதல் ஜுன் வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்தது. குறிப்பாக திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூர் பரமத்தி, நாமக்கல், மதுரை, வேலூர், தருமபுரி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது.
School College Holiday: தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!
இந்த நிலையில் இந்த ஆண்டின் தமிழ்நாட்டின் அதிக வெப்பமான நாள் நேற்று தான் என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தமிழ்நாட்டில் அதிக வெப்பம் பதிவான இடங்களையும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி ஈரோடு, வாணியம்பாடி பகுதிகளில் அதிகபட்சமாக 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.
தமிழ்நாட்டின் அதிகபட்ச வெப்பம் பதிவான இடங்கள் :
ஈரோடு : 43 டிகிரி செல்சியஸ்
வாணியம்பாடி : 43 டிகிரி செல்சியஸ்
அந்தியூர் : 42.4 டிகிரி செல்சியஸ்
மேற்கு தாம்பரம் : 42.3 டிகிரி செல்சியஸ்
நாமக்கல் : 42 டிகிரி செல்சியஸ்
வேலூர் : 41.9 டிகிரி செல்சியஸ்
கள்ளக்குறிச்சி : 41.9 டிகிரி செல்சியஸ்
மேட்டூர் : 41.7 டிகிரி செல்சியஸ்
காஞ்சிபுரம் : 41.7 டிகிரி செல்சியஸ்
திருப்பூர் : 41.5 டிகிரி செல்சியஸ்
கரூர் : 41.5 டிகிரி செல்சியஸ்
ஆரணி : 41.3 டிகிரி செல்சியஸ்
திருச்சி : 41.3 டிகிரி செல்சியஸ்
சேலம் : 41.2 டிகிரி செல்சியஸ்
திருத்தணி : 41.2 டிகிரி செல்சியஸ்
தருமபுரி : 41 டிகிரி செல்சியஸ்
மதுரை : 41 டிகிரி செல்சியஸ்
இதனிடையே இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் 3 முதல் 5 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை அதிக ஈரப்பதம் இருக்கும் போது அசௌகரியம் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.