வரும் 1ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிக்கு செல்லலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி உள்ளார்.
திருச்சி: வரும் 1ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிக்கு செல்லலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி உள்ளார்.
undefined
நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டது.
இந் நிலையில் திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: நவம்பர் 1ம் தேதி முதல் மாணவர்கள் பள்ளிக்கு வருமாறு மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். மாணவர்களிடையே ஒழுக்கத்தை மேம்படுத்த தான் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை முடிந்து பள்ளிக்கு வர விரும்புவர்கள் தாராளமாய் வரலாம். வகுப்பறைகளில் மட்டும் அல்லாது மற்ற இடங்களிலும் மாணவர்கள் கட்டாயம் தனிமனித இடைவெளிளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.