அதிமுக ஆட்சியில் ஒரே கையெழுத்தில் 1.73 லட்சம் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர் என்றும் பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை வீடுபுகுந்து வந்து கைது செய்து சிறையில் அடைத்த கொடுமைகளை எல்லோரும் அறிவார்கள் என்றும் திமுக குற்றம்சாட்டியுள்ளது.
ஆட்சியில் இருந்தபோது ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் இழிவுபடுத்திய எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது நீலிக்கண்ணீர் வடித்து கபட நாடகம் போடுகிறார் என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா என அரசு ஊழியர்களை எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தினார் என்றும் கூறியுள்ளது. அதிமுக ஆட்சியில் இருக்கும்போது ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் இழிவுபடுத்தியது என்றும் திமுக விமர்சித்துள்ளது.
undefined
அதிமுக ஆட்சியில் ஒரே கையெழுத்தில் 1.73 லட்சம் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர் என்றும் பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை வீடுபுகுந்து வந்து கைது செய்து சிறையில் அடைத்த கொடுமைகளை எல்லோரும் அறிவார்கள் என்றும் திமுக குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திமுக, 1988 வரை குறைவான சம்பளம் பெற்றுவந்த ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக 1989இல் ஊதியங்களை உயர்த்தித் தந்தது திமுக அரசுதான் என்று தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் திமுக அரசு அமைந்த காலங்களில் வழங்கிய சலுகைகளையும் பட்டியலிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி 19 ஆண்டுகளில் 4 ஊதியக் குழுக்கள் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் பொருளாதாரத்தை உயர்த்தினார்.
அதிமுக அரசு ஏற்படுத்திவிட்டுப்போன கடன்களால் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படிகளை அவ்வப்போது உயர்த்தி அளித்து வருகிறது எனவும் திமுகவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் நீலிக்கண்ணீர் நாடகம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது எனவும் கூறியுள்ளது.