மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த பேராசிரியர்! புரோக்கராக மாறிய ஆசிரியைகள் மிரட்டல்...

By sathish k  |  First Published Aug 22, 2018, 12:09 PM IST

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியை அடுத்து பேராசிரியர் படுக்கைக்கு  மாணவியை அனுப்ப முயன்ற  பேராசிரியைகள் மிரட்டும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியை அடுத்து பேராசிரியர் படுக்கைக்கு  மாணவியை அனுப்ப முயன்ற  பேராசிரியைகள் மிரட்டும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை  பெரிய மனிதர்களின் கட்டிலுக்கு விருந்தாக்க முயன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை கிளப்பியது.  

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், நிர்மலாதேவி  விவகாரம் அடங்கிய நிலையில் திருவண்ணாமலை வேளாண் கல்லூரி பேராசிரியைகளும் இதே வேலையை செய்துள்ளனர். அந்த ஆடியோக்கள் வைரலாகி வருகின்றன. 

கல்லூரி பேராசிரியைகள் புனிதா, மைதிலி இருவரும் விடுதி வார்டன்களாகவும் உள்ளனர். சென்னையை சேர்ந்த இளம்பெண்  திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் "பிஎஸ்சி" படித்து வருகிறார். அந்த விடுதியில் தங்கி படிக்கும் இந்த மாணவிக்கு உதவி பேராசியர் தங்கபாண்டியன்  செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக விடுதி வார்டன்களிடம் புகார் அளித்தார் மாணவி. ஆனால் வார்டன்களாகவும் உள்ள பேராசிரியைகள் புனிதா மற்றும் மைதிலி மாணவியை உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.

தங்கபாண்டியனின் ஆசையை நிறைவேற்றினால் உன் வாழ்க்கை செட்டிலாகிவிடும் என்றும், அவர் சொல்வதுபோல் கேட்டு நடந்து கொள் என்றும் கூறி மாணவியை தவறான பாதைக்கு செல்ல வற்புறுத்துகின்றனர். ஆசைக்கு இணங்க  மறுத்தால் உன்வாழ்க்கைதான் நாசமாகும் என்றும் உனக்கு எதிராக கொடுக்க எல்லா ஆதாரங்களும் என்னிடம் உள்ளது என்றும் உன் பெற்றோர் வந்து கேட்டால் "நீ இங்கு வரவேயில்லை. எங்கோ ஓடிப்போயிட்ட" என சொல்லிடுவோம். பெரிய பெரிய டிஜிபியே எங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என அந்த மாணவியை மிரட்டும்  ஆடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.  

click me!