கடந்த சில தினங்களாகவே சென்னை மற்றும் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெயில் காலத்தில் தாக்கும், வேர்க்குரு, அரிப்பு, அம்மை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்
கடந்த சில தினங்களாகவே சென்னை மற்றும் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெயில் காலத்தில் தாக்கும், வேர்க்குரு, அரிப்பு, அம்மை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
undefined
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்ப சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில், இடியுடன் கூடிய மழை பேய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் இன்று காலை முதல் மழைக்கான எந்த அறிகுறிகளும், தெரியாவிட்டாலும் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் விதமாக மீண்டும் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.