
21 பேரூராட்சிகளில் தற்போது அவரது அனைத்து பேரூராட்சிகளிலும் திமுகதான் முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல் நகராட்சிகளில் 137ல் 127ல் திமுகதான் முன்னிலை வகித்துக்கொண்டு இருக்கிறது. அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள வார்டுகளில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது.
இது அதிமுகவிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சி 23-வது வார்டுக்கு உட்பட்ட நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வசித்து வருகிறார். இந்த வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி வெற்றி பெற்றுள்ளார்.
அது போல் ஓ பன்னீர்செல்வம் வசிக்கும் தேனி மாவட்டத்தில் திமுக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வார்டுகளில் 11 வார்டுகளை திமுக கைப்பற்றியது. அது போல் பெரியகுளம் நகராட்சியும் திமுக வசம் சென்றுள்ளது. அதிமுக வலிமையாக உள்ள இடங்களில் மண்ணை கவ்வியிருப்பது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.