ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிகளுக்கு மிரட்டல்... முன்ஜாமின் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

Published : Mar 30, 2022, 07:16 PM ISTUpdated : Mar 30, 2022, 07:18 PM IST
ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிகளுக்கு மிரட்டல்... முன்ஜாமின் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

சுருக்கம்

ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக கைதுசெய்யப்பட்ட 9 பேரின் முன்ஜாமீன் கோரிய வழக்கில் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. 

ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக கைதுசெய்யப்பட்ட 9 பேரின் முன்ஜாமீன் கோரிய வழக்கில் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதைக் கர்நாடக அரசு தடை செய்துள்ளதை அடுத்து, அங்கு மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள அரசு பள்ளியில் அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் கர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கில் ஹிஜாப், காவி துண்டு அணிந்து வருவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்றல்ல.

அரசு பள்ளிகளில் ஒரே சீருடை அணிந்து வர வேண்டும் என்ற கர்நாடகா மாநில அரசு பிறப்பித்திருந்த உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டனர். இதை அடுத்து ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அவ்வமைப்பை சேர்ந்த பலரும் கலந்துக்கொண்டனர். அவர்களில் சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதனிடையே மதுரையைச் சேர்ந்த அசன் பாட்ஷா, அபிபுல்லா ஆகிய இருவரும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 17 ஆம் தேதி கோரிப்பாளையம் தர்கா முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் பிரச்சனை தொடர்பாக வழங்கிய தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற ரஹ்மத்துல்லா என்பவர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசை மிரட்டும் விதமாக பேசினார். இந்த தீர்ப்பை எதிர்த்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த அடிப்படையிலேயே கோரிப்பாளையத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இந்த வழக்கு விசாரணைக்கும்,  நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறோம். ஆகவே, இவற்றைக் கருத்தில் கொண்டு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர். இதே போல ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அல்மாலிக் பைசல் நைனா, தவ்ஃபீக், செய்யது நைனா, யாசர், அப்பாஸ், சீனிஉமர்கர்த்தர், அல்டாப் உசேன் உள்ளிட்ட 7 பேரும் இதே  ஜாமின் கோரி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி முரளிசங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தன. மனுதாரர் தரப்பில்,  மத்திய அரசுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. ஆகவே இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில்,  மனுதாரர்கள் மீது வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. பொதுக்கூட்டத்தில் நீதிபதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக பேசியுள்ளனர். ஆகவே அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!