திமுக தேர்தல் வெற்றி விழா..! அண்ணாமலையை தோற்கடித்த கோவையை குறிவைத்த ஸ்டாலின்- எப்போது தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Jun 10, 2024, 2:11 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. 


கோவையில் திமுக வெற்றி விழா

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக்த்தில் எதிர்கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்தவகையில் திமுக கூட்டணி போட்டியிட்ட 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைந்தது. குறிப்பாக பாஜகவை பல தொகுதிகளில் டெபாசிட் இழக்க செய்ததோடு மாநில தலைவர் அண்ணாமலையையும் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனையடுத்து வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழா கோவையில் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கடந்த சனிக்கிழமை (ஜூன் 8 ஆம் நாள்) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற “கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்ட” த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, 

Tap to resize

Latest Videos

Suresh Gopi : பாஜக தலைமைக்கு ஷாக் கொடுத்த சுரேஷ் கோபி.. அமைச்சர் பதவி வேண்டாம் என திடீர் அறிவிப்பால் பரபரப்பு

கோவையை குறிவைத்த ஸ்டாலின்

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சீர்மிகு விழா தமிழ்நாட்டு வெற்றிக்கு கழகத்தை வழிநடத்திச் சென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர், அவர்களுக்குப் பாராட்டு விழா என “முப்பெரும் விழா” ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 14 ஆம் தேதிக்கு பதிலாக "ஜூன்-15ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில்” நடைபெறுகிறது.

கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

மாண்புமிகு கழகத்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நம் கூட்டணிக் கட்சித்தலைவர்கள், வெற்றிபெற்ற நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். அனைத்துக் கழக மாவட்டங்களில் இருந்தும், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், வாக்குச் சாவடி முகவர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என துரைமுருகன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
 

click me!