தமிழகத்துக்கு மேலும் 7.60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன.
சென்னை: தமிழகத்துக்கு மேலும் 7.60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன.
undefined
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக 18 வயது கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட வேண்டும் என்பதில் தமிழக அரசு திண்ணமாக உள்ளது.
அதற்காக வாரம்தோறும் ஞாயிறன்று தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நாளையும் முகாம் நடத்தப்படுகிறது.
இந் நிலையில் புனே, ஐதராபாதில் இருந்து தமிழகத்துக்கு 7.60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன. மகாராஷ்டிராவில் இருந்து 7 லட்சம் கொரோனா தடுப்பூசிகளும், ஐதராபாதில் இருந்து 60 ஆயிரம் தடுப்பூசிகளும் சென்னை வந்துவிட்டன.
சென்னை விமான நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், குளிர்சாதன வாகனங்கள் மூலம் கொண்டு சென்றனர். பின்னர் அவை அனைத்தும் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து படிப்படியாக மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வருகின்றனர்.