
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ. 53.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி, ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடைபெறும் இடங்களில் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதை அடுத்து தமிழகம் முழுவதும் 1,650 பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ அல்லது கட்சி தொண்டரோ, பொது மக்களோ, தகுதியான ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000க்கு மேல் பணத்தை வாகனத்தில் எடுத்து சென்றாலோ, ரூ.10,000க்கு மேல் மதிப்புள்ள விளம்பரத் தட்டிகள், தேர்தல் பொருட்கள், போதைப் பொருட்கள், மது, ஆயுதங்கள் அல்லது அன்பளிப்பு பொருட்கள் அவற்றினை பறக்கும் படைகள் ஆய்லின் போது பறிமுதல் செய்ய அறியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தேர்தல் நடத்தும் பணியில் கட்சிகள் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி 1,650 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும், ரூ.53,72,001 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 40,831 லட்சம் ரூபாய் ரொக்கம், ரூ.12.57 லட்சம் மதிப்புள்ள 15 லேப்டாப்கள், 40 செல் போன்கள், 19 துண்டுகள், 140 குத்து விளக்குகள் உள்ளிட்ட பொருட்கலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ரூ.74 ஆயிரத்து 90 மதிப்புள்ள மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழக அரசுக் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.