12 வயது சிறுமியிடம் ‘பாலியல்’ சீண்டலில் ஈடுபட்ட 50 வயது முதியவர் ; கல்லால் அடித்துக்கொன்ற அதிர்ச்சி ‘சம்பவம்’

By manimegalai a  |  First Published Nov 20, 2021, 6:11 PM IST

12 வயது சிறுமிக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த  50 வயது நபரை அடித்தே கொன்றே உறவினர்கள். இச்சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூரை சேர்ந்தவர் கோபால்.இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலை செய்து வருகிறார்.  இவர் மேல கடையநல்லூரில் உள்ள வேத கோவில் பகுதியில் வசித்து வருகிறார். ஒரு நாள் அவரது வீட்டின் அருகில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றுள்ளார்.அங்கு அந்த 12 வயது சிறுமி மட்டுமே இருக்கிறாள்.வேறு யாரும் இல்லை  என்பதை  அறிந்தே அவ்வீட்டுக்கு  சென்றிருக்கிறார் கோபால்.வீட்டுக்குள்ளே சென்ற கோபால் ‘தண்ணீர் கொண்டு வா,தாகம் எடுக்கிறது’ என்று கேட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

அந்த சிறுமியும் தண்ணீர் எடுத்து வர உள்ளே செல்ல, அப்பொழுது அச்சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டான் கோபால். வீட்டுக்கு வந்த தன் பெற்றோர்களிடம் இந்த பாலியல் சீண்டலை கூறி இருக்கிறார் சிறுமி. இதில் ஆத்திரமடைந்த அச்சிறுமியின் உறவினர்கள் கோபாலை தேடி வீட்டுக்கு சென்றனர். அங்கு அவன் இல்லாததால், ஊர் முழுக்க தேடி கொண்டிருந்தனர்.அப்பொழுது அருகில் உள்ள ஒரு இடத்தில கோபால் வேலை செய்கிறான் என்ற தகவல் கிடைக்க உடனே அங்கு சென்றனர். அங்கு கோபாலை வெளியே வரச்சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வெளிய வந்த கோபால் மீது  கல் எடுத்து உறவுக்கார இளைஞர் போட்டார். உடன் வந்த பெண் ஒருவர் கம்புகளை எடுத்து சரமாரியாக தாக்கினார்.இதனால் பலத்த காயமடைந்து, அங்கேயே உயிரிழந்தான் கோபால். இந்த தகவல் தெரிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கு காரணமாக இருந்த இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர் காவல் துறையினர். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கோபாலை தாக்கும் வீடியோ சிலர் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, வைரலாகி வருகிறது.

 

click me!