பரிட்சையில் பெயில் ஆன தேர்வுத்துறை..அடுத்தடுத்து கசியும் வினாத்தாள்கள்..பிளஸ் 2 வணிகவியல் தேர்வுதாள் லீக்..

Published : Feb 14, 2022, 05:23 PM IST
பரிட்சையில் பெயில் ஆன தேர்வுத்துறை..அடுத்தடுத்து கசியும் வினாத்தாள்கள்..பிளஸ் 2 வணிகவியல் தேர்வுதாள் லீக்..

சுருக்கம்

இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு தொடங்கிய 12 ஆம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்கான தேர்வு தாள் முன்கூட்டியே கசிந்ததாக புகார் எழுந்துள்ளது. நேற்று கணித தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த நிலையில் இன்று வணிகவியல் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.  

தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கான வினாத்தாள் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.ஆனால் நிகழாண்டில் அந்தெந்த மாவட்ட அளவிலேயே வினாத்தாள் தாயரித்து கொள்ளும்படி கல்வித்துறை அறிவுறுத்தியது. இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த 12 ஆம் வகுப்பு கணித தேர்வு மற்றும் 10 ஆம் வகுப்பு அறிவியல் தேர்வுக்கான வினாத்தாள்கள் செய்யாறு பகுதியில் முன்கூட்டியே கசிந்தது. 

மேலும் அந்த பகுதியில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு வாட்ஸ் அப் வழியாக பகிரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இதுதொடர்பாக கல்வித்துறை சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கபட்டது.  இந்நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் இருந்து 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது தொடர்பான விவகாரத்தில் பள்ளி கல்வித்துறை அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. 

மேலும் துறைரீதியான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை அரசு பள்ளியில் தேர்வுத்துறை இணை இயக்குனர் பொன்குமார் விசாரணை நடத்தினார். இதனிடையே அடுத்த அதிர்ச்சியாக, இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு தொடங்கிய 12 ஆம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்கான தேர்வு தாள் முன்கூட்டியே கசிந்ததாக புகார் எழுந்துள்ளது. இன்று பிற்பகலில் நடக்க வேண்டிய தேர்வுக்குரிய வினாத்தாள்கள் சென்னையில் உள்ள 8 பள்ளிகளுக்கு காலையிலேயே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த பள்ளியிலிருந்து வினாத்தாள்கள் கசிந்தன என்பது தெரியவரவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

திருப்புதல் தேர்வுகள் தொடங்குவதற்கு சற்று முன்னரே கேள்வித்தாள்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அப்படி அனுப்பிவைக்கப்பட்ட கேள்வித்தாள்கள், தேர்வுக்கு முன்கூட்டியே பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வினாத்தாள் முன்கூட்டியே மாணவர்களுக்கு கசிந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை முதல் முன்கூட்டியே கேள்வித்தாள்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படாது என்று தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே நேற்று அறிவியல் மற்றும் கணிதம் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு துவங்கிய 12ம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்குரிய வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு தேர்வுகள் துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையில் இருந்துதான் இந்த வினாத்தாள்கள் வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்தே அடுத்தகட்ட விசாரணை தொடங்கியுள்ளன. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!