90களில் புகழ்பெற்ற சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் காலமானார்... பிரபலங்கள் அஞ்சலி..!

By vinoth kumar  |  First Published Feb 10, 2021, 9:55 AM IST

டாக்டர் சிவராஜ் சிவகுமார் குறிப்பாக ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சிக்கான சித்த மருத்துவத்தில் பிரபலமானவர். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.


ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சிக்கான சித்த மருத்துவத்தில் பிரபலமான சிவராஜ் சிவகுமார் உடல்நலக்குறைவால் சேலத்தில் இன்று காலமானார்.

சேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருகின்றது சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமாரின் குடும்பம். 1990ம் ஆண்டுகளில் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் மூலம் பிரபலமானவர். இவர் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நகருக்கு சென்று சித்த வைத்தியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நோயாளிகளுக்கு அறிவுரையும் மருந்து மாத்திரைகளும் வழங்கி வந்தார். 

Tap to resize

Latest Videos

undefined

டாக்டர் சிவராஜ் சிவகுமார் குறிப்பாக ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சிக்கான சித்த மருத்துவத்தில் பிரபலமானவர். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். மேலும் இவரது பரம்பரையினரும் சித்த வைத்தியம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவராஜ் சிவகுமார், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் உடல் சேலம் சிவதாபுரத்திலுள்ள, அவரின் பூர்விக வீரான அகஸ்தியர் மாளிகையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

click me!