கணவர் கட்டிய தாலியை கழட்டி வைத்துவிட்டு, மூன்று குழந்தைகளின் தாயுடன் பெண் ஒருவர் ஓட்டம் பிடித்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள அரசமரத்து கரட்டூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அந்தப்பெண் திடீரென நேற்று முன்தினம் மாயமானார். இதனைத் தொடர்ந்து மனைவியை பல்வேறு இடங்களில் கணவர் தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில் மனம் சோர்ந்து அந்தப் பெண்ணின் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே தாலி கயிரும், மனைவி எழுதி வைத்திருந்த கடிதமும் கட்டிலில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அந்த கடிதத்தை எடுத்து படிக்க படிக்க அவர் அதிர்ந்து போனார். அந்த கடிதத்தில் எனக்கு கணவரோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லை. இதனால் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாயான 39 வயது பெண்ணுடன் செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். இந்த கடிதம் மூலம் தனது மனைவி ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அறிந்த கணவர் வேறுவழியின்றி கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் தனது மனைவி மாயமானது குறித்து புகார் செய்தார்.
கோதையாறு அணை பகுதியில் உல்லாசமாக உலா வரும் அரிகொம்பன்
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மூன்று குழந்தைகளின் தாயுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை தேடி வருகின்றனர். இந்நிலையில் பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றி நகரங்களில் மட்டுமே கேள்விப்பட்ட நிலையில், சேலம் பகுதியில் உள்ள அந்த பெண் வசிக்கும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலிகாலம் ஆகிப்போச்சு என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.
வேலூரில் நோயாளியின் தலையில் இரும்பு நட்டுடன் தையல் போட்ட அரசு மருத்துவர்கள்
காவல்துறையினர் விசாரணையில் ஏற்கனவே ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று இருவரும் ஓட்டம் பிடித்துள்ளனர். பின்னர் இருவரையும் தேடிப் பிடித்து அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கூறி, தாலியை கழட்டி வைத்துவிட்டு மூன்று குழந்தைகளின் தாயுடன் லெஸ்பியன் பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.