திருச்சியில் இருந்து குமரிக்கு காதலியை தேடி சென்ற பெண் விரட்டியடிப்பு

By Velmurugan s  |  First Published May 26, 2023, 1:12 PM IST

திருச்சியில் இருந்து கன்னியாகுமரிக்கு தனது காதலியும், ஓரினச்சேர்க்கை இணையுமான PhD மாணவியை தேடிச் சென்ற இளம் பெண்ணை மாணவியின் பெற்றோர் அடித்து துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.


கன்னியா குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி மாணவி ஒருவர் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் PhD படிப்பிற்க்காக தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்து படித்து வந்துள்ளார். அவர் தங்கி இருந்த விடுதியில் அதே அறையில் திருச்சியைச் சேர்ந்த ப்ரியா என்ற பெண் ஒருவரும் தங்கி இருந்து வந்துள்ளார். நாளடைவில் இவர்கள் இருவரும் காதலர்களாக மாறி ஓரினச்சேர்க்கையாளர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். 

இதற்கிடையே இது தொடர்பான விவரம் தூத்தூரைச் சேர்ந்தவர்களுக்கு தெரியவர அவர்கள் திருச்சி சென்று மாணவியை அங்கிருந்து அழைத்து வந்துள்ளனர். இதனால் காதலியுடன் பேச முடியாமல் பரிதவித்து வந்த ப்ரியா தனது காதலியை தேடி கடந்த மூன்று தினங்களுக்கு முன் குமரி மாவட்டம் தூத்தூருக்கு வந்து மாணவியின் வீட்டின் முன் தர்ணா போராட்டம் நடத்தி உள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் நித்திரவிளை காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

தனக்காக பிறந்த நாள் கொண்டாடியவர்களுக்கு பாசத்துடன் நன்றி தெரிவித்த திருவானைக்காவல் யானை

புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு சென்ற போது மாணவி ப்ரியாவை தெரியாது என்றும் அவர்களுக்குள் எந்த வித உறவும் இல்லை என்று தெரிவித்து உள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் ப்ரியாவிடம் மாணவியை தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறி எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும், காதலியை பிரிந்து செல்ல மனமில்லாத ப்ரியா அந்த ஊரிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து மாணவியை தனியாக சந்தித்து பேச வேண்டி வாய்ப்பை தேடி இருந்துள்ளார். 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக ஐடி அதிகாரிகளுடன் மல்லுக்கட்டிய மேயர் கவிதா கணேசன்

இந்த நிலையில் நேற்று மாலை வேளையில் மீண்டும் ப்ரியா மாணவியின் வீட்டிற்கு சென்று மாணவியிடம் பேச முயன்றுள்ளார். இதனை கண்டு ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், ப்ரியாவை சரமாரியாக தாக்கி விரட்டி உள்ளனர். இதனை அந்த பகுதியில் நின்றிருந்த ஒரு சில இளைஞர்கள் தடுத்து நிறுத்தி ப்ரியாவை பாதுகாப்பாக மீட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ப்ரியா தனது காதலியை மீட்டு தரக்கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு செல்வதாக கூறி அரசு பேருந்தில் ஏறி அங்கிருந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!