புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், தாபங்க் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ், பெங்களூரு புல்ஸ், தமிழ் தலைவாஸ் உள்பட 12 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.
இதுவரையில் தமிழ் தலைவாஸ் விளையாடிய 15 போட்டிகளில் 6ல் வெற்றியும், 9ல் தோல்வியும் அடைந்து 35 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. ஒரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் முதல் 6 இடங்களுக்குள் இடம் பெற வேண்டும். ஆனால், தமிழ் தலைவாஸ் 10ஆவது இடத்தில் உள்ளது. மேலும், இனி வரும் போட்டிகளில் எல்லாம் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெறுவதோடு மட்டுமின்றி மற்ற அணிகளும் சில போட்டிகளில் தோல்வி அடந்தால் மட்டுமே தமிழ் தலைவாஸ் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியானது 63 புள்ளிகளுடன் முதலிடத்திலும், புனேரி பல்தான் அணியானது 60 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், தபாங் டெல்லி 54 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும், குஜராத் ஜெயிண்ட்ஸ் 49 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும் ஹரியானா ஸ்டீலர்ஸ் 45 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும், பாட்னா பைரேட்ஸ் 42 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும் இருக்கின்றன. தமிழ் தலைவாஸ் 35 புள்ளிகள் பெற்றிருக்கிறது. ஆதலால், இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 5 புள்ளிகள் கிடைக்கும். டை செய்தால் 3 புள்ளிகளும், 7 அல்லது அதற்கு குறைவான புள்ளிகளில் தோல்வி அடைந்தால் 1 புள்ளி கிடைக்கும்.
ஒன்று அல்லது 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெற்று 45 புள்ளிகளுடன் 5 அல்லது 6ஆவது இடத்திற்கு முன்னேறும். இதன் மூலமாக தமிழ் தலைவாஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு அமையும். ஆனால், மாறாக 2 போட்டிகளில் தோல்வி அடைந்தால் தமிழ் தலைவாஸ் பிளே ஆஃப் வாய்ப்பு மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.