கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் – தமிழ்நாடு 6 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கல பதக்கத்துடன் முதலிடம்!

By Rsiva kumar  |  First Published Jan 23, 2024, 1:21 PM IST

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் தற்போது வரையில் தமிழ்நாடு 6 தங்கம், 2 வெண்கலம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கம் உள்பட மொத்தமாக 13 பதக்கங்கள் கைப்பற்றி பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.


தமிழகத்தில் 6ஆவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023 சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய இந்த விளையாட்டு போட்டிகளில் கபடி, ஜூடோ, ஸ்குவாஷ், ஃபென்சிங், பாக்‌ஷிங் (குத்துச்சண்டை), ஜிம்னாஸ்டிக்ஸ், யோகாசனம், ஹாக்கி, மல்லாகம்ப், கட்கா, கால்பந்து, கூடைப்பந்து, தடகளம், துப்பாக்கிச் சுடுதல் (ரைபிள், பிஸ்டல்), துப்பாக்கிச்சுடுதல் (ஷாட் ஹன்), வாலிபால், பளுதூக்குதல், கோ கோ, வில்வித்தை, பேட்மிண்டன் என்று பல பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் இதுவரையில் நடந்த போடிகளின் படி தமிழ்நாடு 6 தங்கம், 2 வெண்கலம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கம் உள்பட மொத்தமாக 13 பதக்கங்கள் கைப்பற்றி பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 4 தங்கம், 6 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என்று மொத்தமாக 21 பதக்கங்கள் கைப்பற்றி 2ஆவது இடத்திலும், ஹரியானா 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என்று மொத்தமாக 16 பதக்கங்கள் கைப்பற்றி 3ஆவது இடத்திலும், டெல்லி 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என்று மொத்தமாக 9 பதக்கங்கள் கைப்பற்றி 4ஆவது இடத்திலும் இடம் பெற்றுள்ளன. குஜராத் 3 தங்கம், 2 வெள்ளி பதக்கத்துடன் பதக்க பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

 

🌟 The Roar of Victory! 🏅

Explore the thrill of Youth Games in Tamil Nadu. Discover the champions, follow the medal tally, and cheer for our outstanding athletes as they embark on a journey of excellence. pic.twitter.com/WHdYWUPgnl

— Khelo India (@kheloindia)

 

click me!