முதல் முறையாக ஆடவர் இரட்டையரில் கிராண்ட்ஸ்லாம் டைட்டில் வென்று 43 வயதான ரோகன் போபண்ணா சாதனை!

By Rsiva kumar  |  First Published Jan 27, 2024, 8:41 PM IST

முதல் முறையாக ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா கிராண்ட்ஸ்லாம் டைட்டில் வென்று சாதனை படைத்துள்ளார்.


ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆண்களுக்கான இரட்டர் பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில், இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடியானது இத்தாலியின் சைமன் போலேலி மற்றும் ஆண்ட்ரியா வாவசேரி ஜோடியை எதிர்கொண்டது.

மிகவும் பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் 7-6 (0), 7-5 என்ற செட் கணக்கில் ரோகன் போபண்ணா ஜோடியானது வெற்றி பெற்று ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட்ஸ்லாம் டைட்டில் வென்றுள்ளது. இதன் மூலமாக 43 வயதான வீரராக கிராண்ட்ஸ்லாம் வென்று ரோகன் போபண்ணா சாதனை படைத்துள்ளார். அதோடு ஆடவர் இரட்டையரில் அவர் கைப்பற்றிய முதல் கிராண்ட்ஸ்லாம் டைட்டில் இதுவாகும்.

Latest Videos

இதற்கு முன்னதாக கடந்த 2013 மற்றும் 2023 ஆம் ஆண்களில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியோடு திரும்பி வந்தார். இந்த நிலையில் தான் இந்த ஆண்டு மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் வயதான வீரராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா டைட்டில் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!