
நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு நடக்கும்ஐபிஎல் டி20 15-வதுசீசனில் 3-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
இரு அணிகளுமே தங்களின் முதல் சாம்பியன் பட்டத்தை இன்னும் வாங்கவில்லை. ஒவ்வொரு தொடரிலும் இரு அணிகளும் பட்டத்துக்காக கடுமையாக முயற்சித்து வருகிறார்கள், ஆனால் கோப்பைக் கனவு மட்டும் நிறைவேறவில்லை. ஆர்சிபி அணி கடந்த முறை எலிமினேட்டர் சுற்றுவரை வந்து கேகேஆர்அணியால் துரத்தப்பட்டது. கிங்ஸ் பஞ்சாப் அணி லீக் சுற்றோடு வெளியேறியது.
இரு அணிகளிலும் ஏராளமான புதிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆர்சிபி அணியை விராட் கோலிக்கு பதிலாக தென் ஆப்பிரி்க்க முன்னாள் கேப்டன் டூப்பிளசி்ஸ் வழிநடத்துகிறார். பஞ்சாப் அணிக்கு கேப்டனாக மயங்க் அக்ரவால் பொறுப்பேற்றுள்ளார்.
ஆர்சிபி அணியின் பேட்டிங்கிற்கு வலுசேர்க்க டூப்பிளசிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகியோரும் பந்துவீச்சில் சிராஜ், ஹேசல்வுட், ஹர்சல் படேலும் உள்ளனர். பஞ்சாப் அணியில் பேட்டிங்கிற்கு ஷிகர் தவண், பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டோனும், பந்துவீச்சில் ரபாடா, ஒடியனும் உள்ளனர்
இரு அணிகளும் ஐபிஎல்வரலாறறில் 28 முறை மோதியுள்ளன. இதில் ஆர்சிபி 15 முறையும், 13 முறை பஞ்சாப் அணியும் வென்றுள்ளன.
ஆர்சிபி அணியில் மேக்ஸ்வெல், ஹேசல்வுட், ஜேஸன்பெஹரன்டார்ப் ஆகியோர் ஐபிஎல்முதல்வாரம் வரை வரமாட்டார்கள். பாகிஸ்தானுக்குஎ திரான டி20 தொடரில் தங்கல் நாட்டு அணிக்காக ஆட உள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் பேர்ஸ்டோவும் ஒருவாரத்துக்குப்பின்புதான் அணியில் இணையஉள்ளார். ரபாடாவும் இன்றைய ஆட்டத்தில் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது
பஞ்சாப் கிங்ஸ் ப்ளேயிங் லெவன் அணி:
ஷிகர் தவண், மயங்க் அகர்வால், லியாம் லிவிங்ஸ்டோன், பனுகா ராஜபக்ச, ஷாருக்கான், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஒடியன் ஸ்மித், ஹர்ப்ரீத்பிரார், சந்தீப் சர்மா, ராகுல் சஹர், அர்ஸ்தீப் சிங்
ஆர்சிபி அணி ப்ளேயிங் லெவன்(உத்தேசம்)
டூப்பிளசிஸ்(கேப்டன்), அனுத் ராவத், விராட் கோலி, மஹிபால் லாம்ரோர், ரூதர்போர்ட், தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லே, ஹர்சல் படேல், ஷான்பாஸ் அகமது, முகமது சிராஜ்
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.