கடந்த ஆண்டு நடந்த 9ஆவது சீசனில் தோல்வி அடைந்த நிலையில் புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசனில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை 3 புள்ளிகள் வித்தியாத்தில் வீழ்த்தி முதல் முறையாக புனேரி பல்தான் அணியானது சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் புரோ கபடி லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்டது. இதில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி டிராபியை கைப்பற்றியது. இதையடுத்து மொத்தமாக 9 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான 10ஆவது சீசன் கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கியது.
பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி, பெங்களூரு காளைகள், குஜராத் ஜெயிண்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தான், தமிழ் தலைவாஸ், யு மும்பா, யுபி யோத்தாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் என்று மொத்தமாக 12 அணிகள் இடம் பெற்று விளையாடின. இதில், கடைசியாக புனேரி பல்தான் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இதில் எந்த அணி ஜெயிச்சாலும் முதல் முறையாக டிராபியை கைப்பற்றும் என்ற நிலை இருந்தது. ஹைதராபாத்தில் நடந்த புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசனின் இறுதிப் போட்டியில் ஹரியனா ஸ்டீலர்ஸ், புனேரி பல்தான் அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே அடுத்தடுத்த கோல்கள் அடித்து புள்ளிகள் அடிப்படையில் புனேரி பல்தான் அணி முன்னிலையில் இருந்தது.
ஹரியானா அணியும் 3, 5, புள்ளிகள் குறைவாக பெற்று வந்த நிலையில் கடைசியாக புனேரி பல்தான் அணியானது 28 புள்ளிகள் பெற்றது. ஹரியானா ஸ்டீலர்ஸ் 25 புள்ளிகள் மட்டுமே பெறவே 3 புள்ளிகள் வித்தியாசத்தில் புனேரி பல்தான் அணியானது வெற்றி பெற்று முதல் முறையாக புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசனின் டிராபியை கைப்பற்றியது.
இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் டிராபியை வென்ற நிலையில், புனேரி பல்தான் 2ஆவது இடம் பிடித்தது.