பாரம்பரிய விழாவான ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்படும் நிகழ்வு இன்று பண்டைய ஒலிம்பியாவில் நடைபெற்றது. கிரேக் நடிகை மேரி மினா ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.
கோடைக்கால ஒலிம்பிக் திருவிழாவான பாரிஸ் 2024 ஒலிம்பிக் திருவிழா வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த 1900 மற்றும் 1924 ஆம் ஆண்டில் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. தற்போது 3ஆவது முறையாக கோடைக்கால ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் தான் கிரீஸில் உள்ள பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. கிரீஸ் நடிகை மேரி மினா ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்தார். இந்த ஒலிம்பிக் தீபம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 68 நாட்களுக்கு பிறகு வரும் ஜூலை 26 ஆம் தேதி பாரிஸில் ஒலிம்பிக் சுடர் ஏற்றி வைக்கப்படும் நிகழ்வுடன் ஊர்வலம் முடிவடைகிறது.
இந்த கடினமான காலங்களில் மோதல், போர்கள் அதிகரித்து வருவதால் மக்கள் அவர்கள் எதிர்கொள்ளும் வெறுப்பு போன்ற எதிர்மறையான செய்திகளால் சோர்வடைந்துள்ளனர் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் கூறியுள்ளார். நமக்கு நம்பிக்கை அளிக்கும் ஒன்றிற்காக நாம் ஏங்குகிறோம். இன்று ஏற்றி வைக்கப்படும் இந்த ஒலிம்பிக் தீபமானது நம்பிக்கையின் சின்னமாக விளங்கும் என்று கூறினார்.
கிரீஸ் முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 11 நாட்களுக்கு பிறகு வரும் 26 ஆம் தேதி, 1896 ஆம் ஆண்டு நடந்த முதல் நவீன விளையாட்டு போட்டி நடந்த ஏதென்ஸ் பனாதெனிக் மைதானத்தில் உள்ள பாரிஸ் கேம்ஸ் அமைப்பாளர்களிடம் ஒலிம்பிக் தீபம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட இருக்கிறது.
கிரீஸ் முழுவதும் 11 நாள் தொடர் ஓட்டத்திற்குப் பிறகு ஏப்ரல் 26 அன்று 1896 ஆம் ஆண்டு முதல் நவீன விளையாட்டுப் போட்டி நடந்த ஏதென்ஸ் பனாதெனிக் மைதானத்தில் உள்ள பாரிஸ் கேம்ஸ் அமைப்பாளர்களிடம் சுடர் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும்.
🔥 The Olympic flame for is lit! | pic.twitter.com/1odw4ga9G0
— The Olympic Games (@Olympics)