இந்தியன் சூப்பர் லீக் போட்டிகள் …சொந்த மண்ணில் கொல்கத்தா அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது கேரள அணி !!

By Selvanayagam P  |  First Published Sep 30, 2018, 9:52 AM IST

பத்து அணிகள் பங்கேற்கும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகளில் கொச்கத்தாவில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 2 – 0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.


ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர்  கடந்த 2014–ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் ஏடிகே  அணியும், 2015–ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.அணியும், 2016–ம் ஆண்டில் ஏடிகே  அணியும், கடந்த ஆண்டில் சென்னையின் எப்.சி. அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

இந்த நிலையில் 5–வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா கொல்கத்தாவில் நேற்று இரவு  7.30 மணிக்கு  கோலாகலமாக தொடங்கியது. ரிலையன்ஸ் குரூப்  நீட்டா அம்பானி போட்டிகளை தொடங்கி வைத்தார். முதல் லீக் ஆட்டத்தில் ஏடிகே –கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள்  விளையாடின..

Tap to resize

Latest Videos

undefined

முதல் 33 நிமிடங்களில் கேரள அணி 5 முறை கோல் அடிக்க முயற்சி செய்தும் ஏடிகே அணி கோல் கீப்பர் அதை தடுத்து நிறுத்தினர். இரு அணி வீரர்களும் மிகக் கடுமையான மோதியும் முதல் 45 நிமிடம் வரை கோல் அடிக்க முடியவில்லை.

போட்டியின் இரண்டாவது பகுதியில் 71 ஆவது நிமிடத்தில் கேரள அணியிலும், 74 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியிலும் ஒரு  சிறிய மாற்றம் செய்யப்பட்டது. இரண்டு அணிகளும் மிகக் கடுமையாக போராடி வந்த நிலையில் 77 ஆவது நிடமிடத்தில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆம் கேரளாவின் மதேஜ் பாப்லட்னிக் முதல் கோலை அடித்து அசத்தினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஏடிகே மீண்டும் அணியில் மாற்றம் செய்தது. இதைத் தொடர்ந்தும் இரு அணிகளும் ஆக்ரோஷத்துடன் மோதின. இதையடுத்து 86 ஆவது நிமிடத்தில் கேரள அணியின் ஸ்லாவிசாலா ஸ்டோஜனோவிக் இரண்டாவது கோலை அடித்து அணிக்கு பலம் சேர்த்தார்.

இதைத் தொடர்ந்து 90 அவது நிமிடம் வரை ஏடிகே அணி ஒரு கோலாவது அடித்து வேண்டும் என முயற்சி எடுத்தது. ஆனால் கடைசி வரை அந்த அணியால் கோல் எதுவும் போட முடியவில்லை.இதையடுத்து  சொந்த மண்ணில் கொல்கத்தாவை 2 -0 என்ற கோல் கணக்கில் கேரள பிளாஸ்டர்ஸ் அணி வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.

click me!