
உலக தடகள ஜூனியர் சாம்பியன்ஷிப் 4*400மீ தொடர் ஓட்டம் கலப்பு பிரிவில் ஃபைனலுக்கு முன்னேறியது இந்திய அணி.
இந்திய அணியில் பரத் ஸ்ரீதர், ப்ரியா ஹபதனஹல்லி மோகன், கபில், ருபால் ஆகிய 4 வீரர்கள், வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி 4*400மீ ஃபைனலில் ஆடியது.
இதையும் படிங்க - காமன்வெல்த் போட்டிகள்: லான் பௌல்ஸ் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி
ஃபைனலில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது. அமெரிக்காவிற்கு செம டஃப் ஃபைட் கொடுத்தது இந்தியா. கடைசியில் நூழிலையில் இந்தியாவை வீழ்த்தி அமெரிக்கா தங்கம் வென்றது.
இதையும் படிங்க - ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு..! ஆகஸ்ட் 28ல் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை
அமெரிக்க அணி 3:17:69 என்ற நேரத்திலும், இந்திய அணி 3:17:76 என்ற நேரத்திலும் ஓடி முடித்தன. எனவே அமெரிக்கா தங்கம் வென்றது. இந்திய அணி வெள்ளி வென்றது. இந்திய ஜூனியர் வீரர்கள், வீராங்கனைகள் ஆசிய அளவில் புதிய சாதனையை படைத்துள்ளனர். இதுதான் ஆசிய அணியின் அதிவேக 4*400மீ தொடர் ஓட்ட ரெக்கார்டு ஆகும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.