
India vs Australia Semi Final: பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா என 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. இதில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீபன் ஸ்மித் தங்கள் முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார்.
அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில் அந்த அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 63 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். மும்பை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பத்மகர் ஷிவல்கர் தனது 84ஆவது வயதில் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாகவே இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்துள்ளனர்.
இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டில் பத்மகர் ஷிவல்கர் ஒரு பெரிய வீரராக இருந்தார். மேலும் அவர் மும்பையின் ரஞ்சி டிராபி ஆதிக்கத்தில் பெரும் பங்காற்றினார். 1965-66 முதல் 1976-77 வரை ஒன்பது ரஞ்சி டிராபி பட்டங்களை வென்ற மும்பை அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். 124 முதல் தர போட்டிகளில், அவர் 19.69 என்ற குறிப்பிடத்தக்க சராசரியுடன் 589 விக்கெட்டுகளை வீழ்த்தி வியக்கத்தக்க வகையில் சாதனை படைத்தார். ஆனாலும் பத்மகர் ஷிவல்கர் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியதில்லை.
பத்மகர் ஷிவல்கர் மறைவுக்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்து இருந்தது. "மார்ச் 3, 2025 அன்று காலமான ஸ்ரீ பத்மகர் ஷிவல்கரின் துரதிர்ஷ்டவசமான மறைவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. புகழ்பெற்ற இடது கை சுழற்பந்து வீச்சாளர் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் ஒரு முக்கிய வீரராக இருந்தார், அவரது ஈடு இணையற்ற திறமை மற்றும் விளையாட்டுக்கான அர்ப்பணிப்புக்கு பெயர் பெற்றவர்" என்று பிசிசிஐ இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான செமி பைனலை பொறுத்தவரை இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவ்ல்லை. நியூசிலாந்துக்கு எதிரான அதே வீரர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்திய அணி பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், மற்றும் முகமது ஷமி
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.