ஒலிம்பிக்கிற்கு கலந்துகொள்ளும் இந்திய தடகள அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 தடகள வீராங்கனைகளும், 2 தடகள வீரர்களும் கலந்துகொள்கின்றனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் 26 பேர் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது.
தனிநபர் தடகள போட்டிகளில் 16 பேர் கலந்துகொள்கின்றனர். ஆடவருக்கான 4*400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் 5 போ், கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்தில் 2 ஆடவா், 3 மகளிா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனர்.
ஒலிம்பிக்கிற்கான தடகள அணியில் 3 தமிழக வீராங்கனைகள் மற்றும் 2 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக கர்நாடகத்தின் பூவம்மா, 4*400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கவில்லை. தமிழகத்தை சேர்ந்த சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய 3 வீராங்கனைகளும் கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகிய 2 தமிழக வீரர்களும் இந்திய தடகள அணியில் இடம்பெற்றுள்ளனர். 4*400 மீ தொடர் ஓட்டத்துக்கான அணியில் இவர்கள் இருவருக்கும் இடம் கிடைத்துள்ளது.