Published : Dec 19, 2023, 10:07 AM ISTUpdated : Dec 19, 2023, 09:14 PM IST

IPL 2024 Auction: வெற்றிகரமாக முடிந்த ஐபிஎல் 2024 ஏலம் - 72 வீரர்கள் ஏலம்!

சுருக்கம்

IPL 2024 Auction: வெற்றிகரமாக முடிந்த ஐபிஎல் 2024 ஏலம் - 72 வீரர்கள் ஏலம்!

09:10 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live: வெற்றிகரமாக முடிந்த ஐபிஎல் 2024 ஏலம்…!

09:05 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live:ரூ.20 லட்சத்திற்கு சாகிப் உசேனை வாங்கிய கேகேஆர்!

08:46 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live: ஏலம் போகாத ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித்!

08:44 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live: கடைசி வரை விலை போகாத மணீஷ் பாண்டே – ரூ.50 லட்சத்திற்கு எடுத்த கேகேஆர்!

08:21 PM (IST) Dec 19

IPL 2024 Auction: கடைசி வீரராக ரூ.20 லட்சத்திற்கு ஹைதராபாத் அணியில் வாங்கப்பட்ட ஜாதவேத் சுப்பிரமணியன்

 

08:10 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live:ஜே ரிச்சர்ட்சனை ரூ.5 கோடிக்கு வாங்கிய டெல்லி!

08:03 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live: முஷ்தாபிஜூர் ரஹ்மானை ரூ.2 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே

08:01 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live: ஆஸி, வீரர் ஸ்பென்சர் ஜான்சனை ரூ.10 கோடிக்கு வாங்கிய டைட்டன்ஸ்!

07:31 PM (IST) Dec 19

IPL Auction Live: டேவிட் வில்லியை ரூ.2 கோடிக்கு வாங்கிய லக்னோ!

07:30 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live: ஆஷ்டன் டர்னரை ரூ.1 கோடிக்கு வாங்கிய லக்னோ!

07:28 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live: ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு-ஐ ரூ.1.5 கோடிக்கு வாங்கிய கேகேஆர்

06:30 PM (IST) Dec 19

கார்த்திக் தியாகியை ரூ.60 லட்சத்திற்கு வாங்கிய டைட்டன்ஸ்!

06:27 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live: செட் நம்பர் 10ஐ ரசிகர் ஒருவர் எடுத்துக் கொடுத்தார்

06:18 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live:ஒரே ஓவரில் கை விரித்த குஜராத் – காப்பாற்றி கொடுத்த ஆர்சிபி ரூ.5 கோடிக்கு ஏலம் போன யாஷ் தயால்

06:13 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live: குமார் குஷாக்ராவை ரூ.7.20 கோடிக்கு ஏலம் எடுத்த டெல்லி

06:00 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live: 8ஆவது செட் முடிவில் ஏலம் போகாத வீரர்கள் யார் யார்?

ரோஹன் குன்னும்மாள், சவுரவ் சவுகான், பிரியன்ஸ் ஆர்யா, மனன் வோஹ்ரா, முகமது அர்ஷத் கான், சர்பராஸ் கான், ராஜ் அங்கத் பாவா, விவ்ராந்த் சர்மா, அதித் ஷெத், ஹிருத்திக் ஷோக்கீன் ஆகியோர் ஏலம் எடுக்கப்படவில்லை. அடிப்படை விலை ரூ.20 லட்சம் என்று நிர்ணயித்திருந்தும் ஏலம் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

05:50 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live: கைவிரித்த பஞ்சாப் – தமிழக வீரரை காப்பாற்றிய குஜராத் டைட்டன்ஸ்!

05:44 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live: ரூ.7.40 கோடிக்கு ஷாருக் கானை ஏலம் வாங்கிய டைட்டன்ஸ்!

05:39 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live: தமிழக வீரர் ஷாருக் கானை ஏலம் எடுக்க போட்டி – அடிப்படை விலை ரூ.40 லட்சம்!

05:36 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live: லக்னோ அணியில் ரூ.20 லட்சத்திற்க் விலை போன அர்ஷின் குல்கர்னி

05:31 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live: அங்கிரிஷ் ரகுவன்ஷியை ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

05:29 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live: சமீர் ரிஸ்வியை ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்த சென்னை!

05:25 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live: ஏலத்திற்கான போட்டியில் இந்திய வீரர் சமீர் ரிஸ்வி..

அன்கேப்டு வீரருக்கான ஏல போட்டியில் இந்திய வீரர் சமீர் ரிஸ்வியை ஏலம் எடுக்க சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.
 

05:18 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live: சுபம் துபே ரூ.5.80 கோடிக்கு ஏலம்

05:10 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live: அன்கேப்டு வீரருக்கான ஏலம்

05:07 PM (IST) Dec 19

ரூ.24.75 கோடிக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க்: காரணம் என்ன?

ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அதுவும் யாருமே எதிர்பார்க்காத வகையில் மிட்செல் ஸ்டார்க் இவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட காரணம் என்ன்? மேலும் படிக்க....பேட் கம்மின்ஸை ஓவர்டேக் செய்து வரலாற்றை மாற்றி அமைத்து ரூ.24.75 கோடிக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க்!

04:34 PM (IST) Dec 19

நமோ ஆப்பில் தொடங்கப்பட்ட 'ஜன் மேன் சர்வே’: எம்.பி.க்கள் எப்படி வேலை செய்தார்கள்? - கருத்து கேட்கும் பிரதமர்!

நமோ ஆப்பில் 'ஜன் மேன் சர்வே' தொடங்கப்பட்டுள்ளது. இதில் மோடி அரசு மற்றும் எம்.பி.க்களின் பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன

 

04:14 PM (IST) Dec 19

IPL Auction Live : 4-வது செட்டில் ஏலம் போகாத வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் ஏலத்தில் 4-வது செட்டில் விற்கப்படாத வீரர்கள் :

அடில் ரஷித், வகார் சலாம்கேல், அக்கேல் ஹொசைன், இஷ் சோதி, தப்ரைஸ் ஷம்சி, முஜீப் உர் ரஹ்மான் ஆகிய வீரர்கள் 4-வது செட்டில் ஏலம் போகவில்லை..

04:08 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live : தில்ஷன் மதுஷங்காவை ரூ.4.6 கோடிக்கு வாங்கிய மும்பை இந்தியன்ஸ்..

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்காவை ஏலம் எடுக்க மும்பை - லக்னோ அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ரூ.4.6 கோடிக்கு வாங்கியது.

 

04:04 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live : சன்ரைசர்ஸ் அணியில் ஜெய்தேவ் உனட்கட்..

ஜெய்தேவ் உனட்கட்-ஐ ஏலத்தில் எடுக்க சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி அணிகள் இடையே போட்டி நிலவியது. டெல்லி அணி பாதியில் விலகியதால் சன்ரைசர்ஸ் அணி அவரை ரூ.1.6 கோடிக்கு வாங்கியது. 

 

03:53 PM (IST) Dec 19

IPL Auction Live : அதிக விலைக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க்..!! தட்டி தூக்கிய KKR..

ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க்கை வாங்க ஆரம்பத்தில் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர் டெல்லி, மும்பை அணிகள் ஏலத்தில் இருந்து விலக, குஜராத், கொல்கத்தா அணிகள் அங்கிருந்து ஏலத்தை தொடங்கின. பின்னர் இரு அணிகளும் போட்டிப்போட்டுக் கொண்டு விலையை உயர்த்தியதால் 20 கோடியை தாண்டி சென்றது.

 

இறுதியில் கொல்கத்தா அணி ரூ.24.75 கோடிக்கு மிட்செல் ஸ்டார்க்கை வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். 

 

03:42 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live : சிவம் மாவியை வாங்கியது லக்னோ அணி..

இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிவம் மாவியை வாங்க லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் பெங்களூரு அணி அவரை ரூ.6.40 கோடிக்கு வாங்கியது. 

03:36 PM (IST) Dec 19

IPL Auction Live : குஜராத் அணியில் உமேஷ் யாதவ்..

இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவை ஏலத்தில் எடுக்க குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் குஜராத் அணி ரூ.5.80 கோடிக்கு அவரை வாங்கியது. 

03:31 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live : பெங்களூரு அணி வாங்கிய முதல் வீரர்..!

மேற்கு இந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப்பை ஏலத்தில் எடுக்க சென்னை, பெங்களூரு, லக்னோ, டெல்லி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் பெங்களூரு அணி அவரை ரூ.11.50 கோடிக்கு வாங்கியது. 

03:26 PM (IST) Dec 19

IPL Auction Live : சேத்தன் சக்காரியாவை ரூ.50 லட்சத்திற்கு வாங்கிய கொல்கத்தா அணி..

இந்திய வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சக்காரியாவை ரூ.50 லட்சம் என்ற அடிப்பை விலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.

03:23 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live : முடிந்தது 3-வது செட்.. ஏலம் எடுக்கப்படாத வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் ஏலம்: 3வது செட்டி ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் : டெல்லி கேபிடல்ஸ் - ரூ. 50 லட்சத்திற்கு வாங்கியது
கேஎஸ் பாரத் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.50 லட்சத்திற்கு வாங்கியது.

வாங்கப்படாத வீரர்கள்

பில் சால்ட் (இங்கிலாந்து) 
ஜோஷ் இங்கிலிஸ் (ஆஸ்திரேலியா) 
குசல் மெண்டிஸ் (இலங்கை)

03:19 PM (IST) Dec 19

IPL Auction Live : கே.எஸ். பரத்தை ரூ.50 லட்சத்திகு ஏலம் எடுத்த கொல்கத்தா அணி..

இந்திய விக்கெட் கீப்பரான கே.எஸ்.பரத்தை அவரின் அடிப்படை விலையான 50 லட்சத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.

03:16 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live : ட்ரிஸ்டன் ஸ்டப்ஸை ரூ.50 லட்சத்திற்கு வாங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்..

தென் ஆப்பிரிக்க வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரூ.50 லட்சத்திற்கு வாங்கியது..

 

03:06 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live : ஒரு வீரரை கூட ஏலத்தில் எடுக்காத அணிகள்..!

விறுவிறுப்பாக நடந்து வரும் ஐபிஎல் ஏலத்தில் இன்னும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் உள்ளிட்ட அணிகள் இன்னும் ஒரு வீரரை கூட வாங்கவில்லை..

02:56 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live : 2-வது செட்டில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் ஏலம்: 2வது செட் வீரர்கள் யார் யார்?

பேட் கம்மின்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.20.50 கோடிக்கு வாங்கியது

டேரில் மிட்செல் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடிக்கு வாங்கியது

ஹர்ஷல் படேல் - பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.11.75 கோடிக்கு வாங்கியது

கிறிஸ் வோக்ஸ் - பஞ்சாப் கிங்ஸு அணி ரூ.4.20 கோடிக்கு வாங்கியது

ஜெரால்டு கோட்சே- மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.5 கோடிக்கு வாங்கியது.

ஷர்துல் தாக்கூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.4 கோடிக்கு வாங்கியது

ரச்சின் ரவீந்திரா - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.1.8 கோடிக்கு வாங்கியது

வனிந்து ஹசரங்க - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.1.5 கோடிக்கு வாங்கியது

அஸ்மத்துல்லா ஒமர்சாய்- குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.50 லட்சத்திற்கு வாங்கியது.