சாம்பியன்ஸ் டிராபி 2025 (Champions Trophy 2025) தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து (India vs New Zealand Final) அணிகள் இன்று மோதின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய நியூசிலாந்து 50 ஓவர்களில் 251/7 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் 63 ரன்கள் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் 53* ரன்கள் எடுத்தனர். 252 ரன்களை இந்திய அணி சேஸ் செய்து டிராபியை கைப்பற்றியது.

10:12 PM (IST) Mar 09
12 ஆண்டுகளுக்கு பின்னர் சாதித்த இந்தியா. சாம்பியன் டிராபி கோப்பையை வென்றது. இன்று நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
Score
New Zealand-251/7
Overs-50
INDIA-254/6
Overs-49
10:09 PM (IST) Mar 09
09:58 PM (IST) Mar 09
09:02 PM (IST) Mar 09
08:36 PM (IST) Mar 09
08:20 PM (IST) Mar 09
07:56 PM (IST) Mar 09
07:54 PM (IST) Mar 09
07:21 PM (IST) Mar 09
06:50 PM (IST) Mar 09
06:09 PM (IST) Mar 09
05:56 PM (IST) Mar 09
05:41 PM (IST) Mar 09
05:35 PM (IST) Mar 09
05:27 PM (IST) Mar 09
05:05 PM (IST) Mar 09
04:58 PM (IST) Mar 09
04:47 PM (IST) Mar 09
04:18 PM (IST) Mar 09
04:04 PM (IST) Mar 09
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாராவுடன் மோசமான சாதனையை சமன் செய்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க03:33 PM (IST) Mar 09
நியூசிலாந்து ஸ்டார் வீரர் கேன் வில்லியம்சன் (11 ரன்) குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 12.2 ஓவரில் 75/3 என தடுமாறி வருகிறது.
03:26 PM (IST) Mar 09
குல்தீப் யாதவ்வின் மேஜிக் பவுலிங்கில் ரச்சின் ரவீந்திரா (37 ரன்) கிளீன் போல்டானார். நியூசிலாந்து அணி 11 ஓவரில் 73/2 என்ற நிலையில் உள்ளது.
03:13 PM (IST) Mar 09
வருண் சக்கரவர்த்தியின் மாயாஜால பந்தில் நியூசிலாந்து தொடக்க வீரர் வில் யங் (15 ரன்) எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். நியூசிலாந்து 8 ஓவரில் 58/1 என்ற நிலையில் உள்ளது. ரச்சின் ரவீந்திரா (34 ரன்), கனே வில்லியம்சன் (1) களத்தில் உள்ளனர்.
03:08 PM (IST) Mar 09
இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் நியூசிலாந்து அணி விக்கெட் இழக்காமல் 50 ரன்களை கடந்துள்ளது. 7 ஓவரில் 51 ரன்கள் எடுத்துள்ளது. வில் யங் (15 ரன் ), ரச்சின் ரவீந்திரா (29) களத்தில் உள்ளனர்.
02:55 PM (IST) Mar 09
இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் நியூசிலாந்து அணி 5 ஓவரில் 37 ரன்கள் எடுத்துள்ளது. வில் யங் (10 ரன் ), ரச்சின் ரவீந்திரா (25) களத்தில் உள்ளனர்.
02:40 PM (IST) Mar 09
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா-நியூசிலாந்து இறுதிப்போட்டி தொடங்கியுள்ளது. முதலில் பேட்டிங் செய்யும் நியூசிலாந்து அணி 2 ஓவரில் 6 ரன் எடுத்துள்ளது. வில் யங் (4), ரச்சின் ரவீந்திரா (1) களத்தில் உள்ளனர்.
02:24 PM (IST) Mar 09
மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்ச்செல், வில் யங், மைக்கேல் பிரேஸ்வெல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), வில் ஓ'ரூர்க், க்ளென் பிலிப்ஸ், நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், கைல் ஜேமிசன்.
02:22 PM (IST) Mar 09
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் வருண் சக்ரவர்த்தி.
02:20 PM (IST) Mar 09
இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னணி பாஸ்ட் பவுலர் மேட் ஹென்றி விளையாடவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோள்பட்டையில் காயம் அடைந்ததால் அவர் பைனலில் இருந்து விலகியுள்ளார். லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய அவர் விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும். மேட் ஹென்றிக்கு பதிலாக நாதன் ஸ்மித் இடம்பெற்றுள்ளார்.
02:08 PM (IST) Mar 09
இறுதிப்போட்டியில் இந்திய அணியில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியில் களம் கண்ட அதே அணியே இறுதிப்போட்டியிலும் களமிறங்கியுள்ளது. வருண் சக்கரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் என ஸ்பின்னர்களுடன் இந்தியா விளையாடுகிறது.
02:04 PM (IST) Mar 09
நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மிட்ச்செல் சான்டர் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இதனால் இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது.
01:41 PM (IST) Mar 09
இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாத்வ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தங்களின் மாயாஜால சுழற்பந்துவீச்சு மூலம் எதிரணியை நடுங்க வைத்து வருகின்றனர். இறுதிப்போட்டியில் இவர்கள் 4 பேரும் அணியின் துருப்புசீட்டுகளாக இருப்பார்கள்.
12:50 PM (IST) Mar 09
துபாய் சர்வதேச மைதானத்துக்கு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு துபாய் நிர்வாக அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். துபாயில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சொந்த வாகனங்களில் வராமல் பேருந்து, மெட்ரோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
12:09 PM (IST) Mar 09
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் இன்று இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. ஐசிசி நிகழ்வுகளில் நியூசிலாந்தை விட இந்தியாவின் சாதனை சிறப்பாக உள்ளது.
மேலும் படிக்க11:53 AM (IST) Mar 09
நியூசிலாந்து அணியின் முன்னணி பாஸ்ட் பவுலர் மேட் ஹென்றி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோள்பட்டையில் காயம் அடைந்தார். ஆகையால் அவர் இறுதிப்போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய அவர் இறுதிப்போட்டியில் இடம்பெறாமல் போனால் இந்தியாவுக்கு மிகப்பெரும் நன்மையாகும்.
11:02 AM (IST) Mar 09
இந்தியா-நியூசிலாந்து இறுதிபோட்டி நடைபெறும் துபாய் சர்வதேச மைதானத்தின் பிட்ச் மெதுவான (ஸ்லோ) தன்மை கொண்டதாகும். பொதுவாக இந்த பிட்ச் ஸ்பின்னர்களுக்கு கைகொடுக்கும். அதே வேளையில் பேட்ஸ்மேன்கள் அவசரம் காட்டாமல் பொறுமையுடன் களத்தில் இருந்தால் ரன்களை சேர்க்கலாம். பனியின் தாக்கம் இருக்காது என்பதால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும்.
10:52 AM (IST) Mar 09
துபாயில் இன்று சுமார் 32 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மழை பெய்ய வாய்ப்பில்லை. ஆகையால் எந்தவித இடையூறும் இல்லாமல் ஆட்டம் முழுமையாக நடக்கும்.