Dec 6, 2017, 6:10 PM IST
நடிகர் விஷாலின் அரசியல் பிரவேசம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் நாம், அவரின் அரசியல் ஆசை எந்த இடத்தில் இருந்து தொடங்கியது என்பதை தெரிந்துகொள்ள முற்படவில்லை.
ஏற்கனவே விஷால் தன்னுடைய தாயார் பெயரில் நடத்திவரும் தேவி அறக்கட்டளை மூலம், பள்ளிக் குழந்தைகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் ஆதரவற்றோர்கள் பலருக்கும் உதவி செய்து வருகிறார்.
மேலும், நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளர் என்கிற பதவியையும் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியையும் வகித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில் தான் திடீர் என, அரசியலில் ஈர்ப்பு ஏற்பட்டு விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் களமிறங்க உள்ளதாகக் கூறப்பட்டது.
ஆனால் அதையும் மீறிய ஒரு உண்மை தற்போது வெளிவந்துள்ளது. விஷால் ஒரு சிறுவனிடம் தம்பி உன் லட்சியம் என்ன என்று கேட்க, அந்தச் சிறுவன் விவசாயிகள் நன்றாக இருக்கணும், அதற்கு முதலில் கருவேல மரங்களை வெட்டணும் என்று கூறினானாம்.
உடனே விஷால் அந்த மாணவனுக்காக மிகப் பெரிய அணியைத் திரட்டி கருவேல மர ஒழிப்பில் ஈடுபட்டார்... அப்போது அந்த மாணவன் சிறிதாக கொளுத்திப் போட்ட திரிதான் இப்போது அரசியல் ஆசையாக விஷாலின் மூலம் வெடித்துக்ண்டி கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதோ அந்த வீடியோ காட்சி...