Sep 10, 2018, 6:22 PM IST
முன்னாள் அமைச்சர் ஒருவரை நட்டநடு சாலையில், பச்சை பச்சையாக கெட்ட வார்த்தையில் சத்தம் போட்டு திட்டிக் கொண்டு எஸ்.ஐ. முத்துமாரி சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது. எஸ்.ஐ.யின் இந்த பேச்சால் அதிர்ச்சியடைந்த திமுகவினர், முத்துமாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தி நாகர்கோவில் நகர் முழுவதும் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.