Published : Feb 22, 2022, 02:11 AM ISTUpdated : Feb 22, 2022, 07:23 PM IST

TN Panchayat Result 2022 : பேரூராட்சிகளிலும் அமோக வெற்றி பெற்ற திமுக..மார்தட்டிக்கொண்ட ஸ்டாலின்..

சுருக்கம்

490 பேரூராட்சிகளில் 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தல் நகர்ப்புற உள்ளாட்ச்த் தேர்தலின் பல பரபரப்பும் சுவாரஸ்யங்களும் கலந்த நிகழ்வுகளை நமக்குத் தெந்துள்ளன. மாநகராட்சி, நகராட்சிகளை விட பேரூராட்சிகளில் தான் மக்கள் ஆர்வத்துடன் அதிகம் வாக்களித்திருந்தனர். பேரூராட்சி தேர்தல் முடிவுகள் இதோ உங்களுக்காக உடனுக்குடன்...

TN Panchayat Result 2022 : பேரூராட்சிகளிலும் அமோக வெற்றி பெற்ற திமுக..மார்தட்டிக்கொண்ட ஸ்டாலின்..

08:12 AM (IST) Feb 23

பேரூராட்சி தேர்தல் முடிவுகள் முழு விவரம்.. வெற்றியை தட்டிக்தூக்கிய திமுக கூட்டணி..!

தமிழ்நாட்டில் உள்ள 489 பேரூராட்சிகளில் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், 489 பேரூராட்சிகளில் 80 சதவீதம் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்க்கப்பட்ட எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளது. 

* மொத்த இடங்கள் - 7621
* முடிவு அறிவிப்பு - 7603

திமுக - 4388
அதிமுக - 1206
காங்கிரஸ் - 368
பாஜக - 230
சிபிஎம் - 101
பாமக - 73
அமமுக - 66
விசிக - 51
மதிமுக - 34
சிபிஐ - 26
தேமுதிக - 23
எஸ்டிபிஐ - 16
மமக - 13
முஸ்லீம் லீக் - 12
நாம் தமிழர் - 6
புதிய தமிழகம் - 3
மார்க்சிஸ்ட் (மா.லெ) - 1
ஐஜேகே - 1
என்சிபி - 1
பகுஜன் சமாஜ் - 1
மஜக - 1
தமமுக - 1
சுயேட்சைகள் - 981
போட்டியின்றி தேர்வு- 196
தேர்தல் ரத்து - 12
தள்ளிவைப்பு - 4
வேட்புமனு தாக்கல் இல்லை - 1

04:31 PM (IST) Feb 22

நீலகிரி நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக வெற்றி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி,11 பேரூராட்சிகளில் திமுக வென்றுள்ளது. உதகை, குன்னூர், கூடலூர்,நெல்லியாளம் நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது.மேலும் மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளும் திமுக வசமானது.
 

04:02 PM (IST) Feb 22

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சி சிபிஎம் 7 வார்டுகளில் வெற்றி

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சி சிபிஎம் 7,பாஜக 4, காங்கிரஸ் 2,திமுக, தேமுதிக தலா 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

03:07 PM (IST) Feb 22

கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சி திமுக கைப்பற்றியுள்ளது

மொத்தமுள்ள 18 வார்டுகளில் திமுக 16 இடங்களிலும் சிபிஎம் 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.அதிமுக ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.
 

02:52 PM (IST) Feb 22

ஒரு வாக்கு வித்தியாசத்தில் நாதக கட்சி வேட்பாளர் தோல்வி..

திருச்சி மாவட்டம் கூத்தையார் பேரூராட்சி 7 வது வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நித்யா வெற்றி பெற்றுள்ளார்.நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கர்ணன் 243 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், அவரை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார் சிபிஎம் வேட்பாளர் நித்யா..

02:48 PM (IST) Feb 22

மதமாற்றம் பிரச்சனை எழுந்த திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் திமுக வெற்றி..

மதமாற்றம் பிரச்சனை எழுந்த தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி கிராமம் அமைந்துள்ள திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

02:43 PM (IST) Feb 22

ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர்..

பவானிசாகர் பேரூராட்சியில் 11 வது வார்டில் பாஜக வேட்பாளர் ஓரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியுள்ளார்.
 

02:38 PM (IST) Feb 22

எஸ்.பி.வேலுமணி தொகுதியான தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் அதிமுக படுதோல்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொகுதியான தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.பெருபான்மை பலத்துடன் திமுக வெற்றிபெற்றுள்ளது.
 

02:33 PM (IST) Feb 22

ஒரு வாக்கு கூட பெறாத அதிமுக வேட்பாளர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர் முகமது இப்ராஹிம்ஷா ஒரு வாக்கு கூட பெறவில்லை

02:26 PM (IST) Feb 22

கன்னங்குறிச்சி பேரூராட்சியில் கல்லூரி மாணவி வெற்றி

சேலம் மாவட்டம் கன்னங்குறிட்டி பேரூராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரதியா வெற்றிப்பெற்றுள்ளார்.
 

02:05 PM (IST) Feb 22

கோவையில் 6 பேரூராட்சியில் திமுக வெற்றி..

கோவையில் சிறுமுகை,ரீத்தாபுரம்,தாளியூர்,வெண்ணந்தூர்,குத்தாலம், ஓமலூர் ஆகிய 6 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது.

01:45 PM (IST) Feb 22

TN Election Result: கண்டணூர் பேரூராட்சி... ப.சிதம்பரத்தின் சொந்த வீடு உள்ள பகுதியில் அமமுக வேட்பாளர் வெற்றி

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த வீடு உள்ள சிவகங்கை மாவட்டம் கண்டணூர் பேரூராட்சி 7வது வார்டில் அமமுக வேட்பாளர் வள்ளிகன்னு வெற்றி பெற்றுள்ளார்.

12:52 PM (IST) Feb 22

வேலுமணி கோட்டையில் ஓட்டை... அதிமுகவை வீழ்த்தி காலரை தூக்கி விடும் திமுக

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பேரூராட்சிகளில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. எஸ்.பி வேலுமணியின் சொந்த ஊரான தொண்டாமுத்தூர் பேரூராட்சி  திமுக வசம் சென்றுள்ளது. 

12:49 PM (IST) Feb 22

மாமல்லபுரம் பேரூராட்சி... அதிமுக கைப்பற்றியது

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள 15 வார்டுகள் உள்ளன. இதில், அதிமுக 9, திமுக 4, மதிமுக மற்றும் சுயேட்சை தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து, மாமல்லபுரம் பேரூராட்சி அதிமுக வசம் செல்கிறது. 

12:45 PM (IST) Feb 22

சுயேட்சைகளின் கையில் சாயல்குடி பேரூராட்சி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

12:17 PM (IST) Feb 22

பாஜக எங்கெல்லாம் வெற்றி பெற்றுள்ளது.. முழு விவரம் இதோ

கோவை தெற்கு மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சி 2மற்றும் 3ம் வார்டுகளில் பாஜக வெற்றி.

திருமலையம்பாளையம் பேரூராட்சியில் மூன்றாவது வார்டில் பாஜக வேட்பாளர் திருமதி தமிழரசி வெற்றி.

திருவட்டார் 1-வார்டு பிஜேபி வெற்றி.

ஆர்.எஸ்.மங்களம் பேரூராட்சி 3வது வார்டில் பாஜக வெற்றி.

குமரி மாவட்டம் குலசேகரம் பஞ்சாயத்து 2 வார்டு பிஜேபி வெற்றி.

திற்பரப்பு 2வது மற்றும் 3வது மற்றும்  4வது வார்டு பாஜக வெற்றி.

கன்னியாகுமரி பேரூராட்சி 1வது வார்டு பாஜக வேட்பாளர் வெற்றி.

நீலகிரி கீழ்குந்தா பேரூராட்சி வார்டு 6ல்பாஜக வெற்றி.

கோவை மாநகராட்சி 2 வது வார்டில் பாஜக வேட்பாளர் வத்சலா அபார வெற்றி.

தூத்துக்குடி மாவட்டத்தில்..

கானம் பேரூராட்சி 1வது வார்டு பாஜக வெற்றி.

தென்திருப்பேரை குமரேசன் அவர்கள் வெற்றி 2வது வார்டு.

ஸ்ரீவைகுண்டம் 3வது வார்டு பாஜக வேட்பாளர் சங்கரி அவர்கள் வெற்றி.

நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சி 4வது வார்டு பாஜக வெற்றி.

திண்டுக்கல் மாநகராட்சி 14வது வார்டு பாஜக வெற்றி.

12:09 PM (IST) Feb 22

வளவனூர் பேரூராட்சி.. 8 இடங்களில் வெற்றி பெற்று கைப்பற்றும் திமுக

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சியில் 15- வார்டில் 8 இடங்களை கைப்பற்றியுள்ளது. 
வார்டு-1 திமுக வெற்றி
வார்டு-2 திமுக வெற்றி
வார்டு-3 சுயேட்சை வெற்றி
வார்டு-4 திமுக வெற்றி
வார்டு-5 தேமுதிக வெற்றி
வார்டு-6 காங்கிரஸ் வெற்றி
வார்டு-7 திமுக வெற்றி
வார்டு-8 திமுக வெற்றி
வார்டு-9 திமுக வெற்றி
வார்டு-10 திமுக வெற்றி
வார்டு-11 அமமுக வெற்றி
வார்டு-12 சுயச்சை வெற்றி
வார்டு-13 அதிமுக வெற்றி
வார்டு-14 அதிமுக வெற்றி
வார்டு-15 திமுக வெற்றி

11:46 AM (IST) Feb 22

தலைஞாயிறு பேரூராட்சியை கைப்பற்றுகிறது அதிமுக!

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 இடங்களில் அதிமுக 8 வார்டுகளிலும், திமுக 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பெருபான்மையான இடங்களில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து தலைஞாயிறு பேரூராட்சியை அதிமுக கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

11:42 AM (IST) Feb 22

விக்கிரவாண்டி பேரூராட்சியை கைப்பற்றியது திமுக

விழுப்புரம் மாவட்டம்  விக்கிரவாண்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. மொத்த இடங்கள் 15 திமுக - 9, அதிமுக - 3, சுயேட்சை - 3 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11:37 AM (IST) Feb 22

வேட்டவலம் பேரூராட்சியை அள்ளிய திமுக

திருவண்ணாமலை மாவட்டம் உள்ள 15 வார்டுகளை கொண்ட வேட்டவலம் பேரூராட்சியில் 8 வார்டுகளை கைப்பற்றி திமுக வெற்றி, அதிமுக 5 வார்டுகளிலும், சுயேச்சை 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

11:34 AM (IST) Feb 22

தொடர்ந்து 6வது முறையாக செஞ்சி பேரூராட்சியை கைப்பற்றும் திமுக... கெத்து காட்டும் அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம்  செஞ்சி பேரூராட்சியை தொடர்ந்து 6வது முறையாக திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 18 வார்டில் தற்போது வரை 12 திமுக கைப்பற்றியதால் பேரூராட்சியில் திமுக கைக்கு செல்வது உறுதியாகியுள்ளது. 7வது வார்டில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் மஸ்தான் வெற்றி பெற்றுள்ளார். 

11:14 AM (IST) Feb 22

அனந்தபுரம் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் திமுக- 9, அதிமுக -5  சுயச்சை - 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதனையடுத்து, திமுக அனந்தபுரம் பேருராட்சியை கைப்பற்றியது.

10:58 AM (IST) Feb 22

திருவையாறு பேரூராட்சியை கைப்பற்றும் திமுக

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பேரூராட்சியை திமுக கைப்பற்றுகிறது. 11 இடங்களில் திமுகவும், அதிமுக  1 இடத்திலும், சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

10:41 AM (IST) Feb 22

ஓபிஎஸ் சொந்த தொகுதியில் அதிமுகவுக்கு மரண அடி.. ஒரு வார்டில் கூட வெற்றி இல்லை

ஓபிஎஸ் சொந்த தொகுதியான போடிநாயக்கனூர் - குச்சனூர் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. மொத்தம் உள்ள 12 வார்டுகளில் 11 இடங்களில் திமுகவும், 1 இடத்தில் சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.

10:35 AM (IST) Feb 22

ஒரத்தநாடு பேரூராட்சி.. சத்தமில்லாமல் சாதித்த அமமுக..

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியின் 15 வார்டுகளில் 8 இடங்களில் அமமுகவும், திமுக, அதிமுக தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரத்தநாடு அமமுக வசம் சென்றுள்ளது. 

10:30 AM (IST) Feb 22

நெய்க்காரப்பட்டி பேரூராட்சி.. திமுக கைப்பற்றியது

பழனி நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 13 வார்டுகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில்,  8 வார்டுகளில் வெற்றி பெற்ற திமுக, பேரூராட்சியை  கைப்பற்றுகிறது.

10:06 AM (IST) Feb 22

எஸ்.பி. வேலுமணி தொகுதியில் பறக்கும் திமுக கொடி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பேரூராட்சிகளில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றி வருகிறது. தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் வெற்றி அறிவிக்கப்பட்ட 6 வார்டுகளில் 5 வார்டுகளில் திமுக வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

10:00 AM (IST) Feb 22

வத்தலகுண்டு பேரூராட்சி.. 4 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேரூராட்சியில் 1 மற்றும் 2 வார்டில் திமுகவும், 3 வது வார்டில் விசிகவும், 4.வது வார்டில் காங்கிரஸூம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

09:59 AM (IST) Feb 22

பணகுடி பேரூராட்சி.. குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் வெற்றி

நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சியில் 2வது வார்டில் போட்டியிட்ட பாஜக, அதிமுக வேட்பாளர்கள் 266 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனையடுத்து, குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

09:50 AM (IST) Feb 22

காணம் பேரூராட்சியை கைப்பற்றியது திமுக

தூத்துக்குடி மாவட்டம் காணம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டுகளில் திமுக 7 வார்டுகளிலும், அதிமுக 4 வார்டுகளிலும்,  பாஜக 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. பெரிவாரிய இடங்களில் திமுக வெற்றி பெற்றதையடுத்து காணம் பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது.

09:46 AM (IST) Feb 22

பிக்கெட்டி பேரூராட்சி.. 2 வார்டுகளில் திமுக வெற்றி

நீலகிரி மாவட்டம் பிக்கெட்டி பேரூராட்சியில் 2 மற்றும் 4வது வார்டில் திமுகவும், கீழ்குந்தா பேரூராட்சியில் 1 மற்றும் 2 வது வார்டில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

09:40 AM (IST) Feb 22

அமமுக எங்கெங்கே வெற்றி?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 3வது வார்டில் அமமுக வேட்பாளர் கருப்பசாமி வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், ஒரத்தநாடு பேரூராட்சியில் 1வது வார்டில் பானுமதி, 2வது வார்டு உமாதேவி, 4வது வார்டு சித்ரா, தென்காசி மாவட்டம் பண்மொழி பேரூராட்சியில் 2வது வார்டில் மாரி என்பவம் வெற்றி பெற்றுள்ளார். 

09:36 AM (IST) Feb 22

பொன்மனை பேரூராட்சி.. 2 வார்டுகளில் பாஜக வேட்பாளர் வெற்றி

கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பேரூராட்சி 1வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளரும், 2வது வார்டில் திமுக, 3 மற்றும் 4வது வார்டுகளில் பாஜக வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

09:29 AM (IST) Feb 22

அலங்காநல்லூர் பேரூராட்சி... 3 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி

மதுரை மாவட்டம்  அலங்காநல்லூர் பேரூராட்சி முதல் வார்டில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல்,  2வது வார்டில் திமுக வேட்பாளர் 3 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

09:03 AM (IST) Feb 22

தொண்டாமுத்தூர் பேரூராட்சி.. 1வது வார்டில் அதிமுக, 2வது வார்டில் திமுக வெற்றி

கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சி முதலாவது வார்டில் அதிமுகவும், 2வது வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 

08:57 AM (IST) Feb 22

ஏர்வாடி பேரூராட்சி... எஸ்டிபிஐ வெற்றி

நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி 1-வது வார்டில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் ஜனத்  வெற்றி பெற்றுள்ளார். 3வது வார்டில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அலி பாத்திமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

08:56 AM (IST) Feb 22

மோப்பிரிபாளையம் பேரூராட்சி.. சுயேட்டை வேட்பாளர் வெற்றி

கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சி 1வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் கவிதா வெற்றி பெற்று ஆளுங்கட்சியான திமுகவிற்கும், எதிர்கட்சியான அதிமுகவிற்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

08:54 AM (IST) Feb 22

வேட்டவலம் பேரூராட்சி... திமுக வேட்பாளர் வெற்றி

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சியில் முதல் வார்டு  திமுக வேட்பாளர் தமிழரசி வெற்றி பெற்றார்

08:50 AM (IST) Feb 22

பொன்னமராவதி பேரூராட்சி.. 1வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி 1வது வார்டில் திமுக வேட்பாளர் சாத்தையா நாகராஜன் வெற்றி பெற்றுள்ளார்.

08:38 AM (IST) Feb 22

மூலக்கரைப்பட்டி பேரூராட்சி... 2 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி பேரூராட்சியின் 1வது வார்டில் திமுகவும், 2வது வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.