Published : Mar 19, 2022, 09:07 AM IST

TN Agriculture Budget 2022-2023: தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்.. விவசாயிகள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

சுருக்கம்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை அமலானது. அதன் படி கடந்த ஆண்டு முதன் முறையாக தமிழக அரசு சார்பில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் கர்நாடகா, ஆந்திரா, ஆகிய இரு மாநிலங்களுக்கு பிறகு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் 3-வது மாநிலம் என்ற பெருமை தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

TN  Agriculture Budget 2022-2023: தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்.. விவசாயிகள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

12:02 PM (IST) Mar 19

1 மணி 55 நிமிடங்கள் வேளாண் பட்ஜெட்டை வாசித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

வேளாண் பட்ஜெட் உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நிறைவு செய்தார். 1 மணி 55 நிமிடங்கள் வேளாண் பட்ஜெட்டை அவர் வாசித்துள்ளார்.

12:00 PM (IST) Mar 19

அரசு மாணவியர் விடுதிகளில் காய்கறி, பழங்கள், மூலிகை தோட்டம்

அரசு மாணவியர் விடுதிகளில் காய்கறி, பழங்கள், மூலிகை தோட்டம் நிறுவப்படும்.  200 விடுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என  வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:56 AM (IST) Mar 19

விவசாயிகள் வேளாண்மை விரிவாக்கத்திற்கு இ-சலான், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட்

விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இடுபொருட்களை பெறும்போது, தங்கள் பங்களிப்பு தொகையினை இ-சலான், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை (UPI) மூலம் செலுத்த வழிவகை செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

11:50 AM (IST) Mar 19

வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க ரூ.30.56 கோடி ஒதுக்கீடு

வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் உற்பத்தியாளர் குழு, சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க ரூ.30.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:47 AM (IST) Mar 19

பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு

பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

11:46 AM (IST) Mar 19

விவசாய பணிகளில் ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

விவசாய பணிகளில் ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு ரூ.10 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

11:43 AM (IST) Mar 19

விவசாயிகளுக்கு வழிகாட்ட தமிழ் மண்வளம் என்ற இணையதளம் உருவாக்கப்படும்

விவசாயிகளுக்கு வழிகாட்ட தமிழ் மண்வளம் என்ற இணையதளம் உருவாக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

11:42 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும்

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (டான்சிகோ) மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு ஏற்ற விலையைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும். 

11:28 AM (IST) Mar 19

வேளாண் பண்ணை குட்டைகள் அமைக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு

வேளாண் பண்ணை குட்டைகள் அமைக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

11:27 AM (IST) Mar 19

3 ஆயிரம் விவசாயிகளுக்கு சோலார் பம்புசெட்கள்... ரூ. 65 கோடி ஒதுக்கீடு

ரூ. 65 கோடியில் 3 ஆயிரம் விவசாயிகளுக்கு சோலார் பம்புசெட்கள் வழங்கப்படும்  என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

11:19 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள்

மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்பட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. உழவர் சந்தைகளில் மாலை நேரத்தில் சிறுதானியங்கள் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:16 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: கைபேசியால் இயக்கப்படும் பம்பு செட்டுகள்

பம்பு செட்டுகள் இயக்க தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள் பாம்பு கடித்து இறப்பதை தடுக்க, தானியங்கியாகவோ அல்லது செல்போன் மூலமாக பம்பு செட்டுகளை இயக்கும்  திட்டம் ரூ.5 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

11:14 AM (IST) Mar 19

பனை மரம் ஏறும் கருவியை கண்டுபிடிப்பவர்களுக்கு விருது

பனை மரம் ஏறும் கருவியை கண்டுபிடிப்பவர்களுக்கு விருது வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:12 AM (IST) Mar 19

பயிர்களில் பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த ரூ.5 கோடி சிறப்பு நிதி

பயிர்களில் பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த ரூ.5 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:10 AM (IST) Mar 19

ஆதித்திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம்

ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

11:08 AM (IST) Mar 19

3 மாவட்டங்களில் மொத்த காய்கறி விற்பனை மையங்கள்

தேனி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மொத்த காய்கறி விற்பனை மையங்கள் அமைக்கப்படும். அண்டை மாநில வணிகர்கள் இங்கு நேரடியாக கொள்முதல் செய்ய வசதி ஏற்படுத்தப்படும்.

11:06 AM (IST) Mar 19

டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ கால்வாய்கள் தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு

டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ கால்வாய்கள் தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடும், அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

11:03 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: சோயா பீன்ஸ் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை

தஞ்சை, சேலம், திருவள்ளூர், நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சோயா பீன்ஸ் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

10:56 AM (IST) Mar 19

திண்டிவனம், தேனி, மணப்பாறையில் பிரமாண்ட உணவுப்பூங்கா அமைக்க ரூ.381 கோடி ஒதுக்கீடு

திண்டிவனம், தேனி, மணப்பாறையில் பிரமாண்ட உணவுப்பூங்கா அமைக்கப்படும், இதற்காக ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:55 AM (IST) Mar 19

புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு

50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருச்சியில் நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

10:53 AM (IST) Mar 19

கரும்பு உற்பத்தி அதிகரிக்க சிறப்பு கவனம்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும். கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2,950, கரும்பு சாகுபடிக்கு உதவியாக ரூ.10 கோடியில் உபகரணங்கள் வழங்கும் திட்டம்.

10:50 AM (IST) Mar 19

மயிலாடுதுறை சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க குழு அமைக்கப்படும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க, விவசாயிகளின்  கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

10:48 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த ரூ.65 கோடி ஒதுக்கீடு

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

10:46 AM (IST) Mar 19

வேளாண் கருவிகள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

10:44 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: நெல்லுக்கு பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட மாற்று பயிர்களை சாகுபடி செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு

நெல்லுக்கு பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட மாற்று பயிர்களை சாகுபடி செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

10:43 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: 60,000 தமிழக விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு

60,000 தமிழக விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

10:41 AM (IST) Mar 19

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்திற்கு ரூ.5157 கோடி ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்வாரியத்திற்கு ரூ.5157 கோடி வழங்கப்படும். சீர்மிகு நெல் சாகுபடி திட்டத்திற்கு ரூ.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

10:36 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம்

சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும். வேளாண்துறையில் உற்பத்தி முதல் விற்பனை வரை சேவைகளை முழுமையாக மின்னனு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

10:34 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: 19 மாவட்டங்களில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023ம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. 19 மாவட்டங்களில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும்.

10:32 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: வேளாண்துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி சிறப்பு பரிசு

இயற்கை வேளாண்மை விளைபொருள் ஏற்றுமதி, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு தொடர்ந்து ஊக்குவித்து பரிசு அளிக்கும். வேளாண்துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10:30 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: விவசாயிகளுக்கு மானிய விலையில் செம்மரம், சந்தனம் மரங்கள்

செம்மரம், சந்தனம் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க மர வகைகளின் கன்றுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

10:27 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க ரூ.1 லட்சம்

வேளாண் தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி அரசு சார்பில் பரிசு வழங்கப்படும். 

10:24 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு

30,000 மெட்ரிக் டன் அளவில் நெல் பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.  இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

10:22 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்க ரூ.300 கோடி ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

10:21 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: இயற்கை வேளாண்மை ஊக்குவிக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு

சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயிகளின் வருமானதை அதிகரிக்க மாநில வேளாண் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இயற்கை வேளாண்மை ஊக்குவிக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

10:20 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: உழவர்களை கைப்பிடித்து வளர்ச்சிக்கு அழைத்துச்செல்ல ஊரக வளர்ச்சி துறை

3204 கிராம பஞ்சாயத்துகளில் ரூ.300 கோடி மாநில அரசின் நிதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். உழவர்களை கைப்பிடித்து வளர்ச்சிக்கு அழைத்துச்செல்ல ஊரகவளர்ச்சி துறையுடன் இணைந்து வேளாண்துறை பாடுபடும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

10:18 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: தமிழகத்தில் 29 மாவட்டங்கள் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் அபாயம்

தமிழ்நாட்டில் 29 மாவட்டங்கள் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. புவி வெப்பமடைவதால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. காலநிலை மாற்றத்தை தாங்கி வளரும் பயிர்களை சாகுபடி செய்வது ஊக்குவிக்கப்படும் என வேளாண் அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

10:15 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: உழவு தொழில் உன்னதம் நிறைந்தது என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் வேளாண் பட்ஜெட்

விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற நிலைபாட்டோடு அறிமுகப்படுத்தப்பட்டது தான் வேளாண் பட்ஜெட். தமிழ் இலக்கியங்களில் வேளாண்மை, நீர் மேலாண்மை குறித்து இடம்பெற்றுள்ளன. உழவு தொழில் உன்னதம் நிறைந்தது என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் வேளாண் பட்ஜெட் தாக்கல். 

10:13 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: விவசாயிகளிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நிதிநிலை அறிக்கை

விவசாயிகளிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

10:09 AM (IST) Mar 19

TN Agriculture Budget 2022: வேளாண்மையை உச்சத்திற்கு கொண்டுசெல்லும் பட்ஜெட்

வேளாண்மையை உச்சத்திற்கு அழைத்துச்செல்ல இந்த நிதிநிலை அறிக்கையின் திட்டங்கள் உதவும். கடந்த ஆண்டின் 86 வகையான அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.


More Trending News