Jan 12, 2018, 7:52 PM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்பியவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் சசிகலா சிறையில் இருப்பதால் அவர் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.
ஆணையம் முன் சசிகலா தரப்பில் ஆஜராகி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில், சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்போர் குறித்த பட்டியலை விசாரணை ஆணையம் வழங்க வேண்டும் என்று கோரப் பட்டிருந்தது. இந்த புதிய மனு மீது 22ஆம் தேதி விசாரிக்கப் படும் என்று கூறப்பட்டது.
விசாரணை ஆணையம் அந்தப் பட்டியலை வழங்கிய 15 நாளில் உரிய விளக்கம் அளிக்கப்படுமென ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.