கிருஷ்ணகிரி சத்யசாய் நகரின் ஒருபகுதியில் உள்ள பங்களாவில் வசித்தவர் பிரியா. முக்கிய பிரமுகர்கள் போன்ற தோணியில் இருந்த அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என கூறி வந்தார்.
இதனால், அந்த பகுதியில் அவருக்கு பெரும் மரியாதை இருந்து வந்தது. வி.வி.ஐ.பி.க்கான அந்தஸ்த்தில் வாழ்ந்தார்.
இந்த பிரியாவை சந்திப்பதற்கு, முன்னதாகவே அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அவரை பார்க்க முடியும். அதுவும் சில, நிமிடங்கள் மட்டுமே. ஜெயலலிதாவின் மகள் என பீலா விட்ட, பிரியாவின் சிபாரிக்காக இவரது வீட்டுக்கு ஏராளமான விஐபிக்கள் சென்றனர்.
இதற்கிடையில், தர்மபுரி மாவட்டம் ஜிட்டண்ணஅள்ளி அதிமுக பிரமுகரும், பஞ்சாயத்து தலைவருமான கோவிந்தன் என்பவர், மகேந்திரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்கினர்.
இதேபோல் அதிமுகவை சேர்ந்த முக்கிய விஐபிக்கள், ஆன்மீ வாதிகள், தொழிலதிபர்கள் என பலரிடம் பீலா பிரியா தனது வேலைகளை காட்டி, கோடி கணக்கில் பணம் சேர்த்தது அதிமுக தலைமைக்கு தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக அந்த பெண்ணை கைது செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்பின்னர், கோவிந்தன் கொடுத்த புகாரின்படி போலீசார், நடவடிக்கை எடுக்கு முடிவு செய்தனர். தன்னை கைது செய்ய வந்த போலீசாரிடம், தயாங்காமல் ஜெயலலிதாவின் மகள் என கூறினார்.
அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, பல்வேறு மோசடிகளில் பீலா பிரியா ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அவரது அண்ணன் வாரிசுகள் தீபா, தீபக் இருப்பது தெரிந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி பீலா பிரியா, எம்ஜிஆர் - ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் என்றும், தானே ஜெயலலிதாவின் வாரிசு எனவும் கூறினார். இதையடுத்து போலீசார், அவரை மீண்டும் கைது செய்தனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பிரியா பேசிய வீடியோ, வைரலாக வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர்களில் பரவியது. அந்த வீடியோவில், எம்ஜிஆர் - ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் நான்தான் என கூறியது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபற்றி “NEWSFAST” செய்தியாளர்கள், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, பீலா பிரியா ஏற்கனவே பேசிய வீடியோவை, யாரோ பரப்பி விட்டுள்ளனர் என கூறினர்.