Dec 20, 2018, 3:44 PM IST
உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட உள்ள 8 மாவட்டங்களில் அதுகுறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் மின்சார வாரியம் செயல்படும் எனவும், உயர் மின்னழுத்த கோபுரம் அமைத்த பிறகும் அந்த பகுதியில் விவசாயம் செய்வதற்கு எந்த தடையும் விதிக்கப்படாது எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். அப்போது , IG பொன்மாணிக்கவேல் பற்றிய செய்தியாளரின் கேள்விக்கு கையெடுத்து ஒரே கும்பிடு போட்டு, பதில் ஏதும் தெரிவிக்காமல் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு விட்டார்.