எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க... “ஆமாம் தகவல் திருடு போனது உண்மைதான்...” ஃபேஸ்புக் ஓனர் மார்க் ஜூகர்பெர்க்...

Mar 22, 2018, 10:36 AM IST



ஃபேஸ்புக்  பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டதில் தவறுகள் நடந்தது உண்மைதான் என  ஃபேஸ்புக் ஓனர் மார்க் ஜூகர்பெர்க்  ஒப்புக்கொண்டுள்ளார்.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ஃபேஸ்புக்கில் உள்ள 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களைத் திருடி, ட்ரம்ப் தேர்தலில் வெற்றிபெற உதவி செய்ததாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு நியூஸ் 4 என்ற தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியால் உலக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“Psychographic Modeling Technique” தொழில்நுட்பத்தின் மூலம் குறித்த தகவல்கள் திருடப்பட்டதாகவும், இதனை ட்ரம்ப் அரசியல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திக் கொண்டதாகவும் நியூஸ் 4 தொலைக்காட்சி அம்பலமாக்கியது.

இது  குறித்து மார்க் ஜூகர்பெர்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது. பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் கடமை பேஸ்புக் நிறுவனத்திற்கு உண்டு என்றும் இதை செய்ய முடியாவிட்டால் மக்களுக்கு சேவையாற்றும் தகுதி தங்களுக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தவறுகளுக்கு பொறுப்பேற்றுள்ள மார்க் ஃபேஸ்புக்  இணையதளம் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மீண்டும் ஒரு தவறு நடக்காமல் பேஸ்புக் நிறுவனம் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள பயனாளர்கள், ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தனது பதிவில் கூறியிருக்கிறார்.

Facebook CEO Mark Zuckerberg on the Cambridge Analytica scandal: "This was a major breach of trust, and I'm really sorry that this happened" https://t.co/hpduqQB2r0 pic.twitter.com/gIhL00FlMY

— CNN (@CNN)

ஃபேஸ்புக்கிடம் இருந்து 5 கோடி பேரின் தகவல்களை பெற்ற கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.

இதேபோல் பேஸ்புக் பயன்படுத்தும் இந்தியர்களின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தினால் அந்த நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்திருந்தார்.