Nov 20, 2017, 2:25 PM IST
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் இன்று காலை ஜெயலலிதா மறைவு குறித்து 18 கேள்விகள் அடங்கிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.
ஜெ மரணம் குறித்த விசாரணை கமிஷன் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதற்காக சென்னை எழிலகத்தில் தனி அலுவலகம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஜெ மரணம் குறித்த ஏதாவது ஆதராம் இருந்தாலோ அல்லது ஏதாவது கருத்து தெரிவிக்க வேண்டும் என்றாலோ விசாரணை கமிஷனுக்கு ஒத்துழைப்பு தரலாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது
இந்நிலையில் தீபா கணவர் மாதவன் 18 கேள்விகள் அடங்கிய பிரமான பத்திரத்தை எழிலகம் சென்றுபதிவாளரிடம் வழங்கினார்.
இதற்கு முன்னதாக,ஜெ நினைவிடம் சென்று, அங்கு இந்த மனுவை வைத்து ஆசி பெற்ற பின்னரே எழிலகம் சென்றார் மாதவன் உடன் தீபா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது