வால்பாறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வால்பாறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 2001ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் . தமாகா மாநில துணைத் தலைவராகவும் இருந்தார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமாகாவுக்கு வால்பாறை தொகுதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதிமுகவே அந்த தொகுதியை தன்வசம் வைத்துக் கொண்டது. இதனால் கோவை தங்கம் கடும் அதிருப்தி அடைந்தார்.
இதையும் படிங்க;- தமிழக மக்களிடம் மொழி வெறியை தூண்டிய மு.க.ஸ்டாலின்..! மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்..! இறங்கி அடிக்கும் பாஜக
இந்நிலையில் தமாகாவில் இருந்து தாம் விலகுவதாக கோவை தங்கம் அறிவித்தார். பின்னர், சுயேட்சையாக வால்பாறையில் களம் இறங்குவதாக அறிவித்தார். பின்னர் அந்த முடிவை கைவிட்டு கோவை தங்கம் சேலத்தில் முன்னிலையில் 2021ம் ஆண்டு திமுக இணைந்தார். திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆறுமுகத்துக்காக பிரச்சாரம் செய்தார். எந்த வேட்பாளரிடம் தோற்றாரோ அதே வேட்பாளருக்காக அதே வேட்பாளரின் வெற்றிக்காக கோவை தங்கம் பிரச்சாரம் செய்தார். இதுதொடர்பாக விமர்சங்களும் எழுந்தது.
இந்நிலையில், வால்பாறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் உடல் நலக்குறைவு காரணமாக கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி கோவை தங்கம் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க;- சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் திமுக எம்.பி ஆ.ராசா.. சிபிஐ எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் திமுக