Nov 18, 2017, 2:29 PM IST
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தில் நேற்று வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் செய்தியை அறிந்து இரவு 1 மணி அளவில் போயஸ் தோட்டத்திற்கு தன்னுடைய கார் ஓட்டுநர் ராஜாவுடன் வந்தார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா.
வீட்டுக்குள் செல்ல முயற்சி செய்த அவரை, அதிகாரிகள் வீட்டிற்குள் விடாமல் வெளியிலேயே தடுத்து நிறுத்தினர். அவர் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பின்பும் அதிகாரிகள் அவர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெ.தீபா... போயஸ் தோட்டத்தின் உண்மையான வாரிசு நான் இருக்கும் போது யாரைக் கேட்டு அதிகாரிகள் போயஸ் தோட்டத்திற்குள் காலடி எடுத்து வைத்தனர் என ஆக்ரோஷமாகப் பேசினார். அந்தக் காட்சிகள்...